’லக்கி பாஸ்கர்’ - விமர்சனம்
மும்பையில் மகதா வங்கியில் காசாளராக பணிபுரிபவர் துல்கர் சல்மான். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் மனைவி மீனாட்சி செளத்ரி மகன் ரித்விக் மற்றும் அப்பா,தம்பி, தங்கை என கூட்டு குடும்பமாக வாழ்கிறார்.வங்கியில் நேர்மையாக வேலை பார்க்க எதிர்பார்த்த பிரமோஷன் வேறு ஒருவருக்குப் போய்விடுகிறது. அதோடு மேலதிகாரியால் அவமானப்படுத்தப்படுகிறார்.
எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என முடிவெடுக்கிறார். ஒரு நாள் வங்கிக்கு லோன் கேட்டு வரும் ராம்கியின் நட்பு கிடைக்க வெளிநாட்டு கார்களை வாங்கி விற்பவருக்கு, பணம் தேவைப்பட…வங்கியில் இருந்து யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். மறுநாள் கணக்கை நேர் செய்து விடுகிறார்.
ஒரு கட்டத்தில் மாபியாவுக்கும் வங்கி பணம் போக அதிலும் கமிசன், ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட பணம் குவிகிறது. இதனால் ஒரு கட்டத்தில் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது / இறுதியில் நாயகன் துல்கர் இந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே ’லக்கி பாஸ்கர்’ படத்தின் கதை.
பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவரை கண்முன் நிறுத்துகிறார். மனைவியிடம் காட்டும் காதல், மகனிடம் வெளிப்படுத்தும் பாசம், பணம் நிறைய வந்தவுடன் தலைகாட்டும் ஆணவம். அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மொத்த படத்தையும் தனது நடிப்பு மூலம் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
துல்கர் மனைவியாக வரும் மீனாக்ஷி செளத்ரியும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடுத்தர வர்க்க குடும்பத்தலைவியாகப் பொருந்தியிருக்கிறார்.அவருக்கும் துல்கருக்குமான காதல் காட்சிகள் அருமை அந்தோணி என்கிற வேடத்தில் ராம்கி, துல்கர் மீனாட்சியின் மகனாக நடித்திருக்கும் ரித்விக்,நண்பராக நடித்திருக்கும் ஹைபர் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்டுக்கும் ரகம் , பின்னணி இசை பலம் சேர்த்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி 1989 ஆம் ஆண்டு காலா கட்டத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.
1989 முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் நடக்கும் வங்கி மோசடி மற்றும் பங்குச் சந்தை மோசடிகளை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி அப்பாவி மக்களின் வங்கி சேமிப்பு, எப்படி எல்லாம் எவரால் எடுக்கப்படுகிறது.. எப்படி எல்லாம் பெரிய பெரிய மோசடிகள் நடைபெறுகின்றன, அவர்கள் எப்படி சட்டத்தில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதை நுணுக்கமாகச் சொல்லி இருக்கிறார்.
நடிகர்கள் : துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி, ராம்கி , ரித்விக்
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
இயக்கம் : வெங்கி அட்லூரி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்
Comments
Post a Comment