நீல நிற சூரியன்’ - விமர்சனம்
கஜராஜ் - கீதா கைலாசம் இவர்களின் ஒரே மகனான  சம்யுக்தா விஜயன்  ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். சிறு வயதிலிருந்தே இவருக்குள் தான் ஒரு பெண்ணாக ஆக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கிறது.ஆசிரியர் ஆன பிறகு சிகிச்சை மூலம் பெண்ணாக மாற நினைக்கிறார்.
இதனையடுத்து தான் பெண் போன்று  சேலை அணிந்து வர பள்ளி தலைமை இடத்தில் அனுமதி கேட்க , பள்ளி தலைமையாசிரியர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். பள்ளியின் தாளாளர், இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்

ஒரு கட்டத்தில் தனது  முடிவை வீட்டில் கூற, முதலில் ஏற்க மறுக்கும் பெற்றோர்கள்  பின் ஒரே மகன் என்பதால் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சொந்த பந்தங்கள் ஏற்க மறுக்கிறார்கள் இந்நிலையில்.ஆணாக இருந்த அரவிந்த் பெண்ணாக சேலை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்கிறார்.

 இறுதியில் பள்ளி மாணவர்கள் அரவிந்தை பானுவாக ஏற்றுக் கொண்டதா.? இல்லையா?  இந்த சமூகம் பானுவாக ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? என்பதே ‘நீல நிற சூரியன் படத்தின் மீதிக்கதை.

அரவிந்த் மற்றும் பானு என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  சம்யுக்தா விஜயன். இரண்டிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  கதையின் வலியை நன்றாக உணர்ந்து கொண்டு உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் அழகாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்/

சம்யுக்தா விஜயன் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் கஜராஜ் - கீதா கைலாசம், சித்தப்பாவாக வரும் பிரசன்னா பாலசந்திரன்  துணை தலைமை ஆசிரியராக வரும் மணிமேகலை பி.டி  ஆசிரியர் , மருத்துவராக வரும் கிட்டி என படத்தில்  நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

ஸ்டீவ் பெஞ்சமின் இசையில் ஒரு பாடல் கதையோடு பயணிக்கிறது . பின்னணி இசை கதைக்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எவ்வளவோ திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையை அழகாக கையாண்டு இருக்கிறார்  அறிமுக  சம்யுக்தா விஜயன் தான் சொல்ல வந்த கருத்தை அழகாகவும் எளிமையாகவும் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
அது மட்டுமில்லாமல், IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாக அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.


நடிகர்கள்: சம்யுக்தா விஜயன், கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம், பிரசன்னா பாலசந்திரன், கே வி என் மணிமேகலை, மசந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா

ஒளிப்பதிவு & எடிட்டர் & இசை: ஸ்டீவ் பெஞ்சமின்

இயக்கம்: சம்யுக்தா விஜயன்

மக்கள் தொடர்பு : KSK  செல்வா


Comments

Popular posts from this blog