வேட்டையன்’  - விமர்சனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்பியாக இருக்கும் (ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் தொடர்ந்து என்கவுண்டர் செய்து வருகினார்..

மறுபக்கம் நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக துஷாரா விஜயன் தான் வேலை பார்க்கும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது பற்றி கடிதம் மூலம் ரஜினிக்கு தெரியப்படுத்துகிறார் .இதனால்,துஷாராவுக்கு நற்பெயர் கிடைக்க அவர் எதிர்பார்த்திருக்கும் சென்னைக்கு பணி மாறுதலும் கிடைக்கிறது.

இதே வேளையில் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அமிதாப் பச்சன், சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே நீதி பாதுகாக்கப்படும் என்று நினைக்கிறார். சென்னையில் துஷாரா  வேலை பார்க்கும்  பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

இந்த வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்படும் இளைஞர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்து விடுகிறார். இதனையடுத்து கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரவைக்கப்படும் ரஜினிகாந்த், உண்மை அறியாமல் அந்த இளைஞரை என்கவுண்டர் செய்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில்  அமிதாப் பச்சன் மூலம் துஷாரா கொலைக்கு அந்த இளைஞர் காரணம் இல்லை என ரஜினிக்கு தெரிய வருகிறது .இறுதியில் உண்மையான கொலை குற்றவாளி யார்? என்பதை ரஜினி கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே வேட்டையன்’  படத்தின் கதை.
அதியன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும்  ரஜினிகாந்த் ,என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ஒவ்வொரு காட்சியிலும் மாஸாக நடித்துள்ளார்.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.

திருடனாக நடித்திருக்கும் பகத் பாசில் வரும் அனைத்து காட்சிகளும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் ராணா டக்குபதி மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், அரசு பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், கிஷோர், ஜி.எம்.சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், அபிராமி, ரோகிணி, ரக்‌ஷன் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
அனிருத் இசையில் அனைத்து பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. எஸ்.ஆர்.கதிர்  ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வது சரியா? அல்லது தவறா ? என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் டி.ஜே.ஞானவேல் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்ல இரண்டாம் பாதி  வரும் சில சண்டைக்காட்சிகளையும் நீக்கி இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் .
நடிகர்கள் : ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்விகா சிங், கிஷோர்

இசை : அனிருத் ரவிச்சந்திரன்

இயக்கம் : டி.ஜே.ஞானவேல்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது

Comments

Popular posts from this blog