ராமுவின் மனைவிகள்
(பாதிக்கப்படும் பெண்களின் அவல நிலை பற்றிய கதை)
ராமுவும் மல்லியும் முறைப்படி செய்து கொள்கின்றனர். புகுந்த வீட்டிற்கு வந்த மல்லி மேலும் அங்கு இருக்கும் சில பெண்களை  கண்டு திகைக்கிறாள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஏதோ ரகசியம் இருப்பதை உணர்கிறாள். என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது அங்கிருக்கும் மலர் நாங்கள் அனைவரும் ராமுவின் மனைவிகள்தான் என்று கூற .... இதைக்கேட்ட மல்லி மேலும் அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் மல்லியும், மலரும் மனம் விட்டு நெருங்கி பழகுகிறார்கள்.  ராமுவின் கொடுமையிலிருந்து வெளியேற இருவரும் முடிவு செய்து வீட்டை விட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா ? என்பதே படத்தின் கதை களம் என்கிறார் இயக்குனர் சுதீஷ் சுப்ரமணியம்.
டென்ஸ் ஆப் சங்க்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் கதையின் பாத்திரங்களாக பாலு, ஆதிரா ,சுருதி , தமிழ்ச்செல்வி ,பிரேமா , சந்தோஷ் ,அபி , திவாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு -
விபின் வி.ராஜ்

இசை -
எஸ்.பி வெங்கடேஷ்
பாடல்கள் -வைரபாரதி

எடிட்டிங் -பி.சி மோகன்

சண்டை பயிற்சி - 
ஆக்ஷன்  பிரகாஷ் 
நடனம் - ட்ரீம்ஸ் காதர்

மக்கள் தொடர்பு - வெங்கட்
விளம்பர வடிவமைப்பு -
கம்பம் சங்கர்

தயாரிப்பு -
ராஜேந்திர பாபு ,
ஜெய் மினி ,எம்.வாசு

வசனம் -
ஆர்.உதய பாண்டியன்

கதை  திரைக்கதை இயக்கம் -
சுதீஷ் சுப்பிரமணியம்

இதன் படப்பிடிப்பு 30 நாட்களில் பொள்ளாச்சி, மதுரை, தேனி ,கேரளாவில் உள்ள பட்டாம்பி ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.

இரண்டு சண்டை காட்சிகளும் மூன்று பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Comments

Popular posts from this blog