பிளாக்’ - விமர்சனம்

1964 ஆம் ஆண்டு நடக்கும் கதை விவேக் பிரசன்னா தனது  நண்பனையும் மற்றும் அவரது காதலியையும்   கடற்கரை ஒட்டியிருக்கும் குடியிருப்பில் தங்க வைத்து விட்டு வெளியே சென்று வர காதல் ஜோடிகள் மர்மனான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
 பல வருடங்களுக்குப் பிறகு   ஜீவா - பிரியா பவானி சங்கர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் பார்ட்டிக்கு செல்ல அங்கு ஏற்பட்ட பிரச்சனையில் ஜீவா ஒருவரை அடித்து விடுகிறார்.

இதனையடுத்து உப்பளப்பாக்கம் கடற்கரை பகுதியில் வாங்கி இருக்கும்  புதிய வீட்டிற்கு ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதியினர்  சில நாட்கள் தங்கி வரலாம் என செல்கிறார்கள். அந்த பகுதியில் வேறு யாரும் குடிவராத  அந்தத் தொடர் வீடுகள் பகுதிக்கு அவர்கள் சென்ற இரவு, பல அமானுஷ்ய சம்பவங்Kள் நடக்கின்றன.
உடனே அந்த இடத்தை விடுத்து தப்பித்து செல்லலாம் என இருவருமே நினைக்கிறார்கள். ஆனாலும், ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் இருவரும் வருகிறார்கள். ஒரு கட்டத்தில்  நாயகி பிரியா பவானி சங்கர் காணாமல் போகிறார். இறுதியில் இந்த மர்ம சம்பவங்கள் நடப்பதற்கான காரணம் என்ன? காணாமல் போன பிரியா பவானி சங்கரை ஜீவா கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’பிளாக்’  படத்தின் கதை.
வசந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா .அந்தக் கதாபாத்திரமாகவே மாறி  எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்/ பதற்றமும் கோபமும் குழப்பமும் கொண்ட  மனநிலையோடு அந்தப் பாத்திரத்தை நமக்குள் கடத்தி சென்று விடுகிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பான மிரட்டும் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருப்பது சிறப்பு
ஆரண்யாவாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர்  அன்பு, காதல், ரொமான்ஸ்,பயம், பதட்டம்   என அனைத்தையும்  இயல்பாக செய்திருக்கிறார். தனது  கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடப்பை கொடுத்து பாராட்டு பெறுகிறார். மற்ற கதாபத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னா, யோகி ஜேபி, ஷாரா, ஸ்வயம் சித்தா,ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல் கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் ஹாலிவுட் தரத்தில் இரவு நேர காட்சிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும்  காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்த பிளாக் திரைப்படம் ஒரு ஆங்கிலப் பட ரீமேக் என்று படக்குழுவினர் அறிவித்து விட்டார்கள். முழுமையான அனுமதி பெற்று படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு கதாபாத்திரங்கள், குறிப்பிட்ட ஒரே ஒரு களம், திரும்ப திரும்ப நடக்கும் குறிப்பிட்ட சம்பவங்கள்  சஸ்பென்ஸ் கலந்த திகில் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி, முதல் பாதி பொறுமையாக செல்ல  இரண்டாம் பாதி சிறப்பாக இருக்கிறது.


நடிகர்கள் : ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோகி ஜேபி, சாரா, ஸ்வயம் சித்தா

இசை : சாம்.சி.எஸ்

இயக்கம் : கே.ஜி.பாலசுப்ரமணி

மக்கள் தொடர்பு : ஜான்சன்

Comments

Popular posts from this blog