எனக்கு நம்பிக்கை கொடுக்குது!' -| Arjun Das வெற்றி பாதையில் நடிகர் அர்ஜுன் தாஸ்! பாம் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது.. சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். ’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார். ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தவர், தல அ...
Posts
- Get link
- X
- Other Apps
உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !! G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. vij கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள். ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்...
- Get link
- X
- Other Apps
டார்லிங் - 2(2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் தி ரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இவருடன் இரண்டு படங்களிலும் இணைந்து நடித்த நடிகர் நடிகையர்கள் கலையரசன் ,காளி வெங்கட்,கருணாகரன், சென்றாயன், சித்ராலட்சுமணன் ஞானசம்பந்தம், மாயா, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள். டார்லிங் - 2 படத்தை ஞானவேல்ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டிருந்தது. விதிமதி உல்டா வெளியான பிறகு ஏற் பட்ட தோல்வியால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு திரையுலகைவிட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆ னால் அந்தப் பிரச்சனை களுக்கு இடம் அளிக்காமல் தன்னம்பிக்கையுடன் சொந்த தொழில் தொடங்கி தொழிலதிபரானார் அவர் தொழிலதிபராகி தொடங்கியSKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPESIALISED ROOFINGS PVTLTD நிறுவனம் இன்று அஸ்பால்டிக்ரஃபிங் உற்பத்தியில் தனித்துவமான மோனோபோலி நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. SKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPECIALISED ROOFINGS PVTLTD நிறுவனத்தை...
- Get link
- X
- Other Apps
ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்த “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் சிறப்புக் காட்சி; “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” திரைப்படத்தின் ரசிகர்களுக்கு மட்டும் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சி, அனிமேஷன் உலகின் மிகப்பெரிய கலாச்சார கொண்டாட்டமாக மாறியது. கிரன்சிரோல் மற்றும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், அனிமீ ரசிகர்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் 250க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியது, இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது. கதாநாயகர்கள் தஞ்சிரோ மற்றும் நெசுகோவை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையில் வந்திருந்தார் நடிகை ராஷ்மிகா. தனது விருப்பமான கதாபாத்திரமான ஜெனிட்சுவை சுட்டிக்காட்டும் ஜாக்கெட்டில் வருகை தந்திருந்தார் நடிகர் டைகர் ஷெராஃப். ரசிகர்களுடன் உரையாடியபோது டைகர் ஷெராஃப் கூறுகையில், படத்தில் தான் ரசித்த சண்டைக் காட்சியைப் பற்றி பேசினார். குறிப்பாக ஜெனிட்சு மற்றும் கைகாகுவுக்கு இடையேயான காட்சிய...
- Get link
- X
- Other Apps
*ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது* *'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது* ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உ...
- Get link
- X
- Other Apps
’லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’ - விமர்சனம் அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி ஸ்வீடனில் எதிரிகளுடன் ஏற்படும் மோதலில் இருந்து உயிர் பிழைத்து பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் இரவு நேர வேலையில் சேர அங்கிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். கல்யாணி வசிக்கும் வீட்டிற்கு எதிரே இருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் கல்யாணியுடன் நட்பாக பேசி பழகி வருகிறார்கள். அதே சமயம், 3 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடி வர இதனால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டிக்கும் தொடர்பு இருக்கிறது. ஒரு நாள் இரவு நேரத்தில் நஸ்லான், கல்யாணியை பின்னால் போக, கல்யாணியை அந்த உடல் உறுப்பு திருடும் கும்பல் ஆட்டோவில் கடத்தி ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள தொழில் சாலைக்கு கொண்டு செல்ல அந்த கும்பலில் இரண்டு பேரை கல்யாணி கொன்று விட ஒருவன் மட்டும் தப்பித்து சென்று விடுகிறான். ...
- Get link
- X
- Other Apps
*சிலம்பரசன் டி.ஆர்- வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த வீடியோ வெளியீடு* சிலம்பரசன் டி. ஆர். மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த கூட்டணி குறித்த புது அப்டேட்ஸ் விரைவில் வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த காணொலியில் STR ன் தோற்றம் அல்லது கதைக்கள விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும்.. ரசிகர்களிடையே உற்சாக அலையை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள தலைப்பு, வடிவமைப்பு மற்றும் எழுத்துரு ஆகியவை.. தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகி பாராட்டைப் பெற்ற கேங்ஸ்டர் படமான 'வடசென்னை '( 2018) படத்தின் பாணியுடன் வலுவாக ஒத்திருக்கிறது. இந்த ஒற்றுமை வரவிருக்கும் STR.ன் படம்.. வடசென்னையின் பிரபஞ்சத்துடன் இணைக்கப்படலாம் என்ற உடனடியான ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் புதிய படம் வடசென்னைக்கு இணையான காலவர...