டார்க்’ - விமர்சனம்#Dark Movie– (3.5/5)வழக்கமான த்ரில்லர் பாதையில் செல்லாமல், சைக்கலாஜிக்கல் சஸ்பென்ஸ் மற்றும் டார்க் டோனை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம்.
’டார்க்’ - விமர்சனம்
சென்னையில் கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 3 இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தீ வைத்து தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் வாடகைக்கு வராமல் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அந்த வீடு குறித்து உண்மை தெரிந்ததும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வரும் நாயகன் அஜய் கார்த்திக் வந்த சில நாட்களிலேயே சில அமானுஷ்ய விஷங்கள் நடக்க அதில் உறைந்து போகிறார். ஒருநாள் அஜய் கார்த்திக்குடன் இரவு தங்கும் உரிமையாளரான பாக்யராஜ் மறுநாள் மர்மமான முறையில் இறந்துக் கிடக்கிறார்.
அதே இடத்திலேயே நாயகன் அஜய் கார்த்திக்கும் கொடூரமான காயங்களுடன் இறந்து கிடக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரி நட்டி, iஇது குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை எச்சரித்து விட்டு மீண்டும் மயங்கி விழுகிறார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கையில் பல அதிர்ச்சி யூட்டும் விஷயங்கள் கிடைக்கின்றன. இறுதியில் 3 பேர் கொலைக்கான காரணம் என்ன ? பாக்யராஜ் மகன் அஞ்சனாவிற்கும் இந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உணடா ? இல்லையா ? என்பதே ’டார்க்’ படத்தின் ம
கதை
கதாநாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்திக் அப்பாவி இளைஞராக இயல்பான நடப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது இரண்டாவது படத்திலேயே இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுயிருக்கிறார். அம்மா மீது வைத்திருக்கும் பாசம், எப்போதும் எதையோ பறிக்கொடுத்தவர் போல உணர்வை உள்வாங்கி உணர்வு பூர்வமாக நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி, அந்த மர்ம வேட்டிக்குள் சென்று விசாரணை மேற்கொள்ள அதன் பிறகு நடக்கும் சம்பங்களை பார்த்து அதிர்ச்சி அடையும் இடங்களில் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் மறைந்த கே.பாக்யராஜ், தனது அனுபவ நாட்டியப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுயிருக்கிறார்.
கே.பாக்யராஜ் மகளாக வரும் அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், நாயகனின் அம்மாவாக வரும் இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
.
ஒரு வீட்டில் 3 இளைஞர்கள் கொலையை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் திரில்லர் கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இத்திரைப்டத்தில் காதல், நட்பு, துரோகம், என அனைத்தையும் கலந்து அடுத்து என்ன நடக்குமோ என்ற ஒரு எதிரிபார்ப்போடு கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில், சஸ்பென்ஸ் மற்றும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர்களை விரும்புபவர்களுக்கு #Dark ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும். வித்தியாசமான திரைக்கதை, டார்க் பிரசென்டேஷன் மற்றும் திருப்திகரமான கிளைமாக்ஸால் இந்த படம் ரசிகர்களை ஈர்க்கிறது. 🔥👏
நடிகர்கள் : அஜய் கார்த்திக், அஞ்சனா நேத்ருன், நட்டி நட்ராஜ், கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி
இசை : மனு ரமேஷன்
ஒளிப்பதிவு : ரவி சக்தி
இயக்கம் : கல்யாண் கே.ஜெகன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Comments
Post a Comment