ஜனநாயகன் ’ - விமர்சனம்
‘ ஜனநாயகன் ’ - விமர்சனம்
மதுரையில் நடந்த ஒரு கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நாயகன் விஜய் , அங்கு உயிருக்கு ஆபத்தில் சிக்கியிருக்கும் அரசியல் பிரமுகரை ரௌடிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். இதன் மூலம் சிறை அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனனுடன் அவருக்கு நெருக்கமான நட்பு உருவாகிறது.
பின்னர் உடல்நிலை மோசமான தனது தாயார் ரேவதியை சந்திக்க விஜய்க்கு சிறப்பு அனுமதி வாங்கித் தரும் கௌதம் வாசுதேவ் மேனன், அதனால் தனது பதவியை இழக்கிறார்.
சிறையிலிருந்து வெளியே வரும் விஜய், அவரையும் அவரது மகள் மமிதாவையும் சந்திக்க செல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கௌதம் வாசுதேவ் மேனன் விபத்தில் உயிரிழக்கிறார்.
அதன்பின் மமிதாவை வளர்க்கும் பொறுப்பு விஜய்க்கு வருகிறது. பயந்த சுபாவம் கொண்ட மமிதாவை தைரியமான பெண்ணாக மாற்றி, இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதே விஜய்யின் லட்சியமாகிறது.
இதற்கிடையில் ஆப்பிரிக்காவில் வன்முறைகளை நிகழ்த்திய பாபி தியோல், இந்தியாவை குறிவைத்து ஒரு பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார். அவரது திட்டத்தை முறியடிக்கவும், மமிதாவை பாதுகாக்கவும் விஜய் மீண்டும் களத்தில் இறங்குகிறார்.
இறுதியில் மமிதாவை விஜய் காப்பாற்றினாரா? அவரை இராணுவ அதிகாரியாக உருவாக்கினாரா? பாபி தியோலின் சதித்திட்டத்தை முறியடித்தாரா? என்பதே ‘ ஜனநாயகன் ’ படத்தின் கதை.
நாயகன் தளபதி விஜய், வழக்கம்போல தனது ரசிகர்களை கவரும் வகையில் தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். வழக்கமான ரொமான்ஸ், குறும்புத்தனம் போன்ற அம்சங்களை ஓரம்கட்டி, அரசியல் சார்ந்த கருத்துகள் மற்றும் பிரச்சார காட்சிகளுக்கு இந்த முறை அதிக முக்கியத்துவம் அளித்திருப்பது படத்தில் தெளிவாக உணரப்படுகிறது.
ஆக்ஷன் காட்சிகளில் தனது மாஸ் தோற்றத்தாலும், பஞ்ச் வசனங்களில் தனது தனித்துவமான பாணியாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். குறிப்பாக, திரையரங்கில் ஆரவாரத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, காதல் காட்சிகள், கவர்ச்சி பாடல்கள், நடனங்கள் என வழக்கமான அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், நாயகனுக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
நேர்மையான காவல்துறை உயரதிகாரியாக இருந்து, பின்னர் ஏற்பட்ட அவமானத்தால் கொடூரமான வில்லனாக மாறும் கதாபாத்திரத்தில் பாபி தியோல் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் தனது அதிரடி நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
விஜயின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதா பைஜூ, ஏதோ ஒன்றை இழந்தவர் போன்ற உணர்வுடன் படம் முழுவதும் பயணிக்கிறார். தெலுங்கில் நடிகை ஸ்ரீலீலா நடிப்பு, நடனம், சண்டை என அனைத்திலும் அசத்தியிருப்பார். அதில் பாதியளவு கூட இந்த கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
ஜெயிலராக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அரசியல்வாதியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், கலெக்டராக நடித்திருக்கும் பிரியாமணி, விஞ்ஞானியாக நடித்திருக்கும் நரேன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், விஜயின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி, தொழிலதிபராக நடித்திருக்கும் ஜி.எம். சுந்தர் என படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மகளின் பயத்தைப் போக்கி, அவரை தைரியமான பெண்ணாக மாற்றுவதற்காக ஒரு தந்தை எடுக்கும் முயற்சிகளை மையக்கருவாக கொண்டு இயக்குநர் எச். வினோத் படத்தை உருவாக்கியிருக்கிறா
விஜயின் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக வைத்து முழுமையாக நகரும் படமாக உருவாக்கியுள்ள இயக்குநர்,
நடிகர்கள் : விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ்,
இசை : அனிருத் ரவிச்சந்தர்
இயக்கம் : எச்.வினோத்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ்
Comments
Post a Comment