Boonie Bears: The Hidden Protector Movie Review
சீன அனிமேஷன் உலகில் குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் Boonie Bears பிராஞ்சைஸின் புதிய படைப்பு தான் “Boonie Bears: The Hidden Protector.” பிரையர், பிராம்பிள், விக் என்ற மூவரும் மாய உலகம், அதிசய சக்திகள், மனிதர்கள் மற்றும் அமரர்களின் உலகம் என இரு பரிமாணங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு ஒரு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதே இந்த படத்தின் மையம். குடும்பங்களுக்கான fantasy-comedy adventure ஆக வந்திருக்கும் இந்த படம், கண்ணுக்கு விருந்து கொடுக்கும் animation-ஐ மையமாக வைத்து நகர்கிறது.
பிரையர், பிராம்பிள், விக் ஆகிய நண்பர்கள் எதிர்பாராத விதமாக புராணங்களில் வரும் Year Monster “Nian”-இன் மாய சக்திகளைப் பெறுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் Eve City எனப்படும் மந்திர உலகிற்குள் இழுக்கப்படுகிறார்கள். அந்த நகரம் சாதாரண இடமல்ல — மனிதர்களும், அமரர்களும், மர்ம சக்திகளும் இணைந்து வாழும் விசித்திரமான உலகம். ஆனால் அந்த உலகமே ஒரு பழமையான அச்சுறுத்தலால் சிதைவின் விளிம்பில் நிற்கிறது. இந்த அபாயத்திலிருந்து மனித உலகையும், அமரர் உலகையும் காப்பாற்ற இந்த மூவரும் எதிர்பாராத ஹீரோக்களாக மாற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. காமெடி, சாகசம், மாயம், உணர்ச்சி என அனைத்தையும் கலந்து குழந்தைகளுக்கேற்ற வகையில் நகரும் fantasy ride தான் இந்த படம்.
இது animation படம் என்பதால் வழக்கமான “நடிப்பு” அளவுகோலுக்கு பதிலாக character energy மற்றும் screen presence தான் முக்கியம். அந்த வகையில்: Briar & Bramble இருவரின் chemistry படம் முழுக்க fun factor-ஐ உயிரோட்டமாக வைத்திருக்கிறது. Vick கதாபாத்திரம் comedy timing-களில் நல்ல support கொடுக்கிறது. மூன்று characters-க்கும் தனித்தனியான personality feel இருப்பதால் குழந்தைகள் எளிதாக connect ஆக முடிகிறது. Emotional stakes அதிகமாக இல்லாவிட்டாலும், friendship மற்றும் teamwork angle நன்றாக வேலை செய்கிறது. இந்த trio தான் படத்தின் heart. அவர்களால் தான் படம் முழுக்க ஒரு lively tone maintain ஆகிறது.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால் அது Animation Quality.
சில இடங்களில் வரும் 2D animation sequences ரொம்பவே அழகாகவும் impressive-ஆகவும் அமைந்திருக்கிறது. நிறங்களின் பயன்பாடு, magical effects, creature designs, action staging — எல்லாமே பெரிய திரை அனுபவத்திற்கு ஏற்ற மாதிரி உள்ளது. Eve City உருவாக்கப்பட்ட விதம் மிகப் பெரிய plus. அது ஒரு fantasy playground மாதிரி தெரிகிறது. Background detailing, lighting, visual transitions போன்றவை குழந்தைகள் மட்டுமல்ல, animation ரசிகர்களையும் ஈர்க்கும் அளவுக்கு இருக்கிறது. சில சீன animation படங்கள் visually ambitious-ஆ இருக்கும்; அதே வரிசையில் The Hidden Protector கூட தன் visual ambition-ஐ நன்றாக காட்டுகிறது.குழந்தைகளோடு ஜாலியாக படம் பார்க்கலாம்.
Comments
Post a Comment