டபுள் ஆக்குபென்சி’ - விமர்சன

‘டபுள் ஆக்குபென்சி’  - விமர்சனம்
போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பல வருடங்களாகவே குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். கடவுளின் அருளால் இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை  இறந்து  விடுகிறது.
இதனையடுத்து  போஸ் வெங்கட் கடவுளிடம் மனம் உருகி வேண்ட கடவுளின் அருளால் மீண்டும் அந்த குழந்தைக்கு உயிர் கிடைக்கிறது.  ஆனால் உயிர் பெற்ற குழந்தை பெண்ணாக இருக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அரிய சக்தி அந்த குழந்தைக்கு கிடைக்கிறது.

ஒரு உடலில்  இரண்டு  குணாதிசயம் கொண்ட உயிர்கள்  வாழ்கிறார்கள். இந்நிலையில் ஒரு விபத்தில் பெற்றோர்களை இழக்க இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள். காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா ஆய்வகத்தில்  வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத்  கிஷனை காதலிக்கிறார்.
மறுபக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயகி சம்யுக்தாவை பார்த்தும் காதல் கொள்கிறார். தங்களுடைய உண்மையான நிலையை வெளியே சொல்ல முடியாமல் இருவரும் தவிக்கிறார்கள்.

இறுதியில்  இருவரின் காதல் கைக்கு கூடியதா ? இல்லையா? என்பதே “டபுள் ஆக்குபன்ஸி”  படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் முதல் படம் போல இல்லாமல் இயல்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.  காதல், ஆக்ஷன் , ரொமான்ஸ் ,  என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். இவருடைய காதலியாக வரும் சம்யுக்தா  கவர்ச்சியில்  மட்டும் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ்  கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். காதல், எமோஷனல், செண்டிமெண்ட் என அனைத்திலும் கவரும் விதத்தில் இருக்கிறார். இவருடைய காதலராக வரும் வினோத் கிஷன்  வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெறுகிறார்.

தொழிலதிபராக வரும் விடிவி கணேஷ் வரும் காட்சிகள் ரசிக்க மற்றும் சிரிக்க முடிகிறது. வில்லனாக நடித்திருக்கும் பகவதி பெருமாள் மற்ற கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

ஒரு உடலில் இருக்கும் இரண்டு உயிர்களுக்கு இடையே நடக்கும் வாழ்க்கை போராட்டத்தை அடிபப்டையாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இருக்கும்  இயக்குநர்  அஸ்வின் கந்தசாமி. கற்பனைக்கு எட்ட முடியாத ஒன்றை முயற்சி செய்திருக்கிறார். காதல், உறவு, பாசம், எமோஷனல் என அனைத்தையும் கலந்து கலகலப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

நடிகர்கள் : சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன்,விடிவி கணேஷ், பகவதி பெருமாள்
இசை : சாம் சி.எஸ்
இயக்கம் : அஸ்வின் கந்தசாமி
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்(ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)