கான் சிட்டி ’ - விமர்சனம்

கான் சிட்டி ’ - விமர்சனம்
சென்னை , மங்களபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் நாயகன் அர்ஜுன் தாஸ் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்க அதை திருப்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் மின்சாரத்திற்கு பணம் செலுத்த வருபர்களிடம் போலியான ரசீதியை கொடுத்து மோசடி செய்கிறார்.
மறுபுறம் லீசுக்கு வீட்டை எடுக்கும்  கர்ப்பிணியான அன்னா பென் சில நாட்களிலேயே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்கிறார். இதனையடுத்து இதை போலவே பலரிடம்  லீஸ் மற்றும் வாடகைக்கு வீட்டை விடுவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்கிறார்.

இதே சமயம் வடிவுக்கரசியின் மகனான யோகிபாபு அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் தேவைப்பட  பலரிடம் கேட்டும் யாரும் பணம் கொடுக்க முன் வராததால்  டிரஸ்ட் ஒன்றை நடத்துவதாக கூறி பல லட்ச ரூபாயை ஏமாற்றி மோசடி செய்கிறார்கள்.
இதனையடுத்து அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் மோசடி செய்து சேர்த்து வைத்த  பணத்தை அர்ஜுன் தாஸிடம் கொடுக்கிறார்கள்.  அர்ஜுன் தாஸின்   நண்பருக்கு அவசர தேவை என்பதற்காக  10  கோடி ரூபாயை கொடுக்க அவரது நண்பர் திடீர் என கொலை செய்யப்படுகிறார்.
இதனையடுத்து அர்ஜுன்தாஸ் ,அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி  ஆகியோரை போலீஸ்  கைது செய்ய அவர்களிடம் இருந்து தப்பி மங்களூர் செல்கிறார்கள். அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.  இதே சமயம் அன்னா பென்னின்  மகனை யாரோ ஒருவர் பள்ளியில் இருந்து கடத்தி செல்கிறார்.

இறுதியில் குழந்தையை கடத்தியது யார்? எதற்காக ?   அன்னா பென் குழந்தையை அர்ஜுன் தாஸ் காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதே  ‘கான் சிட்டி ’ படத்தின் மீதிக்கதை.

சரவணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன்தாஸ் இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். மோசடி செய்ய போடும் பிளான்,காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். குழந்தையை காப்பாற்ற எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் ரசிக்க முடிகிறது .

மித்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென்  எதிர்த்த நடிப்பபை கொடுத்திருக்கிறார். யோகி பாபு, வடிவுக்கரசி இவர்களுடைய காமெடி ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.

சிறுவன் அகிலன், இன்ஸ்பெக்டராக வரும் நந்தகோபால், VTV கணேஷ், ராதா ரவி என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை,யில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் விதத்தில் இருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதனின்  ஒளிப்பதிவு பக்க பலமாக உள்ளது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதை மைய கருவாக வைத்து ஒரு முழு நீள காமெடி கலந்த குடும்ப திரைப்படத்தை உருவாகியிருக்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்  இத்திரைப்படத்தில் மூன்று குடும்பங்கள் வெவ்வேறு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இவர்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைவது போல கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.

நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, நந்தகோபால், VTV கணேஷ்
இசை : ஷான் ரோல்டன்
இயக்கம் : ஹரிஷ் துரைராஜ்  
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்(ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)