எங்கள் தங்கம்’ - விமர்சனம்

‘எங்கள் தங்கம்’ - விமர்சனம்
ஆதரவற்ற இல்லத்தில் வளர்த்து வரும் சமந்தா, கௌதமி, ஆனந்த் தம்பதிகளின் மூத்த மகனான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 3 வருடங்களுக்குப் பிறகு கணவரின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார்.

பாரம்பரிய மிக்க அவரது குடும்பத்தில்  இருக்கும் உறுப்பினர்கள்  அனைவரின் அன்பை பெறுவதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக்  கொள்கிறார். இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா அடியாள் ஒருவனை அனுப்பி சமந்தா குறித்து விசாரித்து வர சொல்கிறார்.  
விசாரிக்க சென்றவன் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறான், இதனையடுத்து சிறையில் இருந்து தப்பிக்கும் குல்ஷன் சமந்தாவை நேரில் சந்தித்து தன்னுடன் வந்துவிடு இல்லாவிட்டால் உனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று கூறுகிறான்.

இறுதியில் சமந்தா தான் யார் ? என்ற உண்மையை குடும்பத்தில் கூறினாரா? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற சமந்தா எடுத்த முடிவு என்ன?  கணவரின் தங்கை திருமணம் நடந்ததா ? இல்லையா ?  என்பதே  ‘எங்கள் தங்கம்’ . படத்தின் கதை.
ஸ்வர்ணம் கதாபாத்திரத்தில் அமைதியாக அறிமுகமாகும் சமந்தா தனது  குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஜான்சியாக அதிரடி காட்டியிருக்கிறார். அனைவரின் அன்பை பெறுவதக்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக இவர் தோழியுடன் சேர்ந்து செய்யும் ரகளைகள் சிரிக்க முடிகிறது. படத்தின் இறுதி காட்சிகளில் காட்டும் ஆக்ஷன் மூலம் நான் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறுவது போல இருக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா,  கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார். சிறையில் இருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
மருத்துவராக சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்‌ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின்  இசையில்  பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது . ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ஆக்ஷன் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஆதரவற்ற பெண் கூட்டுக குடும்பத்தில் இடம் பிடிப்பதை மைய கருவாக வைத்து இத்திரைப்படத்தை உருவாகியிருக்கும் இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி குடும்ப திரைப்படத்தை ஆக்ஷன், காமெடி  கலந்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.

நடிகர்கள் : சமந்தா, திகந்த் மஞ்சாலே, கௌதமி, ஆனந்த் , ஸ்ரீ லக்ஷ்மி, குல்ஷன் தேவய்யா
இசை : சந்தோஷ் நாராயணன்
இயக்கம் : பி.வி. நந்தினி ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்(ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)