சாருகேசி ’ - விமர்சனம்

’சாருகேசி ’ - விமர்சனம்
கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவி சுஹாசினி, மகன் ராஜ் அய்யப்பாவுடன் வசித்து வருகிறார்.  குடிப்பழக்கத்தால்  மகன் ராஜ் அய்யப்பா அப்பாவிற்கு அவமானத்தை பெற்றுத் தருகிறார்.

இந்நிலையில் பாட வாய்ப்பு தேடி வரும் ரம்யாவை பார்த்தும் ராஜ் அய்யப்பா காதல் வயப்பட  இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதே சமயம் ஸ்டுடியோ  ஒன்றை வாங்குவதற்காக ராஜ்  அய்யப்பா பெங்களூர் செல்கிறார்.

இதனையடுத்து மருமகள்  ரம்யா  ஒய்.ஜி.மகேந்திரனிடம்  ராஜ்  அய்யப்பா உங்களுக்கு பிறந்தவர் இல்லை என்ற உண்மையை கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் ஒய்.ஜி.மகேந்திரன் , ரம்யாவை பற்றி தெரிந்து கொள்ள செல்லும் வழியில் மயக்கம் அடைய அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் டிரைவரான தலைவாசல் விஜய்

அங்கு  மருத்துவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கூற ஒய்.ஜி.மகேந்திரன் அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் ஒய்.ஜி.மகேந்திரன் சேர்க்கப்படுகிறார்.

இறுதியில் ஒய்.ஜி.மகேந்திரன் நலம் பெற்று மருத்துவ மனையில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா?  மருமகள் ரம்யா யார் ? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? ராஜ் அய்யப்பா , ஒய்.ஜி.மகேந்திரனை  அப்பாவாக  ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே ’சாருகேசி ’  படத்தின் கதை.
புகழ்பெற்ற பாடகர் சாருகேசியாக  நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன்  அனுபவ நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.  மனைவி மீது காட்டும் பாசம், மகன் மீது கொள்ளும் அக்கறை , டிரைவரையும் உடன் பிறந்த தம்பி மாதிரி பார்க்கும் குணம், பாடல் பாடும் போது  வெளிப்படுத்தும் உணர்வுகள்  என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.  

சாருகேசி மனைவியாக வரும் சுஹாசினி மணிரத்னம் கணவருக்கேற்ற மனைவியாக சச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.  மகனிடம் உண்மையை சொல்லும் இடத்தில் தி கவனம் பெறுகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ்  கதை அடுத்த அக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு துணை நிற்கிறார். தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண்  என மற்ற கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.  சஞ்சய் பி எல்  ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.

புகழ் பெற்ற பாடகரின் வாழ்க்கையை மைய கருவாக வைத்து இத்திரைக்கதையை உருவாக்கி இருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இத்திரைப்படத்தில் குடும்பத்தில் புரிதல் எவ்வளவு முக்கியம் என்றும் அதனால் கிடைக்கும் பயன்கள் என்னவெல்லாம் என்று அழகாக பதிவு செய்திருக்கிறார்.

நடிகர்கள் : ஒய்.ஜி.மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன்,
இசை : தேவா
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்(ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)