காட்டாளன்’ - விமர்சனம்

’காட்டாளன்’  - விமர்சனம்
கேரளா எல்லையில் உள்ள ஆனைக்கொல்லி என்ற மலைக்  கிராமத்தில் யானை கூட்டங்களால் அப்பாவி மக்கள் அடித்துக் கொலை செய்யப்படுகிறார்கள்.இதனையடுத்து யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் சுனிலிடம் ஊர் மக்கள் உதவி கேட்கிறார்கள்.
காட்டு யானைகளை கொன்று  தந்தம் எடுத்துக்கொள்ளும்  சுனில்  அந்த மக்களை அடிமைப்படுத்துவதோடு  பெண் களையும் சிறுமிகளையும் தூக்கிச் சென்று சீரழிகிறான்.  இதே சமயம் சுனில் இடத்தை பிடிக்க நினைக்கும்  கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை  உயர் அதிகாரி உதவியுடன் கைப்பற்றுகிறார்.

இந்நிலையில் பறிக்கப்பட்ட தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களத்தில்  இறக்குகிறார்.  காவல்துறை உயர் அதிகாரியை ஏமாற்றி இழந்த தந்தத்தை மீட்டெடுப்பதோடு சுனில் மனதில் ஆண்டனி வர்கீர் தனி இடம் பிடிக்கிறார்.

இதற்கிடையே பழங்குடி சிறுமிக்கு விபத்து ஏற்பட அவரை காப்பாற்ற பல லட்சம் தேவைப்படுகிறது. ஆண்டனி வர்கீர் சுனிலிடம் பணம் கேட்க அதை கொடுக்க மறுக்கிறார். இதையடுத்து பணத்திற்காக காட்டு யானை ஒன்றை கொன்று அதன் தந்தத்தை விற்பதற்காக ஸ்ரீலங்காவிற்கு கொண்டு செல்கிறார்.

இதனால் கோபமடையும் சுனில் ஆண்டனியை கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார். இறுதியில் ஆண்டனி வர்கீஸ் யானை தந்தத்தை விற்பனை செய்தாரா ? இல்லையா ? சிறுமி உயிரை காப்பாற்றினாரா? இல்லையா ?  என்பதே ’காட்டாளன்’  படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ் கடத்தல்காரனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.  போலீஸ் உயரதிகாரி கண் முன்னே தந்தத்தை எடுத்துச் செல்லும் காட்சிகளில் கைதட்டல் வாங்குகிறார். அமைதியான முகத்தோடு அதிரடி சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

கடத்தல் மன்னனாக சுனில் மிரட்டியிருக்கிறார்.  மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

நாயகனை காப்பாற்றும் முக்கிய வேடத்தில் துஷாரா விஜயன் அதிரடி காட்டியிருக்கிறார். நடை, உடை சண்டை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர்  என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்.
இசையமைப்பாளர் ரவி பசுரூர் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக  உள்ளது . ரெனாடைவ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இருக்கிறது.

யானை தந்தம் கடத்தலை மைய கருவாக வைத்து ஒரு அதிரடி திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பால் ஜார்ஜ்  இத்திரைப்படத்தை கடத்தலை மட்டும் சொல்லாமல் மக்கள்படும் துன்பம் மற்றும் துயரத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார். இத்திரைப்படம் arampam முதல் இறுதிவரை கதையை விறுவிறுப்பாக நகர்த்தி சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : ஆண்டனி வர்கீஸ், சுனில், ஜெகதீஷ், கபீர் துகான் சிங், தூஷாரா விஜயன், அன்சான் ரவி
இசை  ரவி பசுரூர் 
இயக்கம் : பால் ஜார்ஜ்  
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்



 
 

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie