கருப்பு ’ - விமர்சனம்

‘கருப்பு ’  - விமர்சனம்
ஏழு கிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் செல்வாக்கு படைத்த வழக்கறிஞர் ஆர் ஜே பாலாஜி . அந்த நீதி மன்றத்தின்  நீதிபதி நட்டிக்கு லஞ்சம் கொடுத்து எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்று அந்த நீதி மன்றத்தை தனது  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

இதே சமயம் கேரளாவில் இருந்து இந்திரன்ஸ் தனது மகளின்  ஆபரேஷனுக்காக சென்னை வருகிறார். வந்த இடத்தில் இவர்களுடைய  நகையை திருடர்கள் கொள்ளையடித்து செல்ல, பிறகு  அதனை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள். ஆனால், 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திருப்பி கொடுக்க முன் வர மேலும், இந்த நகையை  நீதிமன்றத்தின் மூலமாக பெற்றுக் கொள்ள சொல்லுகிறார்கள்.

இந்த வழக்கை ஆர்.ஜே. பாலாஜி எடுத்து  நடத்த  சாதாரணமாக முடிய வேண்டிய வழக்கை பணத்திற்காக  இந்த வழக்கு 4 மாதங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டே போக ஒரு கட்டத்தில் பாலாஜியால் நமக்கு நீதி கிடைக்காது என இந்திரன்ஸ் தெரிந்து கொள்கிறார்.

இதன்பின் இந்திரனை  அடித்து  இனி இந்த வழக்கை நீ எப்படி நடத்துறாய் என்று பார்க்கிறேன் என பாலாஜி சவால் விடுகிறார்.   நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கருப்பு சாமியிடம் இந்திரன்ஸ் தனது வேதனையை கூறி, என் பிரச்சனையை தீர்த்துவை என மிளகாய் அரைத்து கருப்பு சாமிக்கு பூசுகிறார்.

பக்தரை காப்பாற்ற வேட்டை கருப்பாக வரும் சூர்யாவிடம் ஆர்.ஜே. பாலாஜி உங்கள் சக்திகளை பயன்படுத்தாமல்
நீதிமன்றத்தை நேர்மையாக நடத்த முடியுமா என்று சவால் விடுகிறார்.இறுதியில் கருப்பசாமியாக வரும் சூர்யா சவாலில் வெற்றி பெற்றாரா ? இல்லையா? இந்திரன்ஸ்  தனது  மகளை காப்பாற்றினாரா ?  இல்லையா? என்பதே ‘கருப்பு ’ படத்தின்கதை.
கருப்பசாமியாக அதிரடி சண்டை , ஆக்ரோஷம்  என ஒருபுறமும் வக்கீல் சரவணனாக நீதி , நேர்மை , நியாகம் என்று மறுபுறத்தில் நடிப்பு, நடனம், என ஆக்ரோஷ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மெய் சிலிர்க்க வைத்து விடுகிறார்.

வக்கீலாக  நடித்திருக்கும் த்ரிஷா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்து அனைவரின் கவனத்தையும் பெறுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி  சரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் கதாபாத்திரத்தில் சரியாக பெருந்தியிருக்கிறார். இவரது டைமிங் காமெடி ரசிக்க முடிகிறது.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் இந்திரன்ஸ் , நீதிபதியாக வரும் நட்டி நடராஜன், சுவாசிகா, சிவதா, ஜார்ஜ் மரியான், வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், லொள்ளு சபா மாறன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்  சாய் அப்யங்கரின் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. ஜி கே விஷ்ணு. ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் செய்கிறது.
in
நீதிமன்றத்தில் நடக்கும் முறைகேடுகளை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இத்திரைப்படத்தில் நீதிமன்றத்தில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே வைத்து கதையை கொண்டு சென்றிருக்கிறார்.  நிச்சயம்  இத்திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்

நடிகர்கள் : சூர்யா, திரிஷா, ஆர் ஜே பாலாஜி, நட்டி, இந்திரன்ஸ் , சுவாசிகா, ஷிவதா, வேல ராமமூர்த்தி
இசை : சாய் அப்யங்கர்
இயக்கம் : ஆர்.ஜே. பாலாஜி
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S 2 Media )

 
 



 

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie