சட்டென்று மாறுது வானிலை ’ - விமர்சனம்

‘சட்டென்று மாறுது வானிலை ’  - விமர்சனம்
ஆதரவற்ற இலலத்தில் வளரும் நாயகன் ஜெய் ஐ.டி. நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார். மறுபுறம் அமைச்சரின் மகளான மீனாட்சியை அரசியல் தலைவரான சரவண சுப்பையாவிற்கு 2 வதாக திருமணம்  செய்து வைக்க  மீனாட்சியின் அப்பா நினைக்கிறார்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறும் மீனாட்சி ஹாஸ்டலில் தங்குகிறார்.  ஜெய், மீனாக்ஷியை பார்த்தும் காதல் கொள்கிறார்.  ஒரு பிரச்சனையில் இருந்து மீனாட்சியை ஜெய் காப்பாற்ற இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இருவரும் தேன்நிலவிற்காக கொடைக்கானல் செல்கிறார்கள். அங்கு கருடன் ராம் நடத்தி வரும் ஹோட்டலில்  தங்குகிறார்கள். அங்கிருந்து வந்த பிறகு ஜெய், மீனாட்சி இருவருக்கும் சண்டை ஏற்பட்ட பிரிகிறார்கள்.

இந்நிலையில் கருடன் ராம் ஹோட்டலில் எதோ மர்மம் உள்ளது என்பதை ஜெய் கண்டுபிடிக்கிறார். இதே சமயம் நாயகி மீனாட்சி காணாமல் போகிறார். இதனையடுத்து ஜெய் கைது செய்யப்படுகிறார்.

இறுதியில் ஜெய் காணாமல் போன நாயகி மீனாட்சியை கண்டுபிடித்தாரா ? இல்லையா? கருடன் ராம் ஹோட்டலில் நடக்கும் மர்மத்தை என்ன? என்பதை ஜெய் வெளி உலகிற்கு கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே ‘சட்டென்று மாறுது வானிலை ’ படத்தின் கதை.
ஐடி  நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடித்திருக்கும் ஜெய் துடிப்பு மிக்க இளைஞசராக துறுதுறுவென இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.    காதல், நடனம், நடிப்பு,  சண்டை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.  பல இடங்களில் இவர் செய்யும் ஒவொவொரு அசைவும் தளபதி (cm) விஜயை நினைவுபடுத்துகிறார்,

நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். காதல், பாசம், சென்டிமென்டி , ரொமான்ஸ் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெய் - மீனாட்சி இருவரின் கெமிஸ்ட்டி சிறப்பாக இருக்கிறது.

ஹோட்டல் அதிபராக நடித்திருக்கும் கருடன் ராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். யோகி பாபுவின் காமெடி ரசிக்க முடிகிறது. ஆதித்யா கதிர் ,சத்யன் , ஸ்ரீமன், ஆதித்ய கதிர், சரவண சுப்பையா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்க முடிகிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.  ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் உளள்து.
இன்றைய சமூகத்தில் நடக்கிற சில அசம்பாவித சம்பவங்களை மைய கருவாக வைத்து  ஒரு முழு நீள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்  பாபு விஜய்  இத்திரைப்படத்தில் தேன் நிலவிற்கு செல்லும் தம்பதிகளின் அந்த்ரங்க வீடியோ அவர்களுக்கு தெரியாமல்  எப்படி எடுக்கபப்டுகிறது. என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

நடிகர்கள் : ஜெய், யோகி பாபு, மீனாட்சி, கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்ய கதிர்
இசை : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
இயக்கம் : பாபு விஜய்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (Aim)

 


 

 

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie