பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா*
*“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா*
“ரங்கஸ்தலம்” படத்தை மிஞ்சும் ராம் சரண் நடிப்பு… பிரம்மாண்டமாக உருவாகும் “பெத்தி”
70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு
மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.
படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.
மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டும் இயல்பான கிராமத்து தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞன் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தானாகவே உருவாக்கிய பேட் போல அதனை வடிவமைத்துள்ளார்களாம். அந்த கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் ராம்சரண் மிகவும் பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் என அனைத்தையும் அவர் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக “பெத்தி” குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரண் நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
*Peddi Is A One-Of-A-Kind Film, Audiences Will Walk Out Of Theatres With Tears In Their Eyes: Production Designer Avinash Kolla*
Mega Power Star Ram Charan's rural action drama Peddi, directed by Buchi Babu Sana, produced on a massive scale by Venkata Satish Kilaru under the Vriddhi Cinemas banner and presented by Mythri Movie Makers and Sukumar Writings, is slated for a worldwide theatrical release on June 4th. Expectations for the movie have already reached enormous heights with chartbuster songs and stunning glimpses. Meanwhile, Production Designer Avinash Kolla shared insights about the movie.
How did you feel when Director Buchi Babu narrated this story?
In my ten-year career, this is the first time I have been this excited about a story. After the director narrated the story, I wasn't myself for about 20 minutes. It moved me that deeply. Because the story itself has so much strength, I decided right then that I needed to take extreme care in all aspects of the production design.
This is a period drama, right? What precautions did you take regarding the sets?
When a set is built for a movie, the audience shouldn't realize that it is a set. Only then is an Art Director successful. As far as I am concerned, the audience will not perceive the sets built for this film as sets. They are that natural.
This is a story set in the 70s and 80s. I have already worked on many period films. I have that experience. Peddi is a story set in the Vizianagaram area. We recreated the streets, the clock tower, and all of those elements. We also designed the surrounding areas of Vizianagaram. Similarly, we took great care with the wrestling and cricket games. We created a wrestling setup in this that no one has ever seen before. For that, we shot in an underground setup. The shot where Charan garu appears with a mace was filmed right there.
What about DOP Rathnavelu?
If the DOP and the Art Director are in sync, the film will definitely turn out perfectly. Such a great sync happened here. It was a great joy working with Rathnavelu. We worked with excellent coordination.
There is cricket in this, right? Will it be like Lagaan?
No. Lagaan is a story that happened during the British era. This is set in the mid-70s and 80s against a Vizianagaram backdrop. When you watch the cricket here, it will carry the exact natural feeling you get while sitting on the ridges of the fields in our villages watching a game.
We did pre-production for this film for over a year. During that time, we created miniatures for every single set. We built every set for this movie in an open ground. We shot entirely in natural light.
We needed a hill station town for this. We built that inside a Bhoot Bungalow (a haunted house) in Hyderabad. When you watch the movie, it will feel like a town situated at the foot of a hill. Building that set felt very challenging.
Director Buchi Babu and I worked with very good coordination. There is a sugarcane factory in this. That is also a set. However, the beauty of it is that you won't be able to spot even a single element as a set.
How many sets did you build for Peddi?
There are 24 sets built from scratch. Apart from that, there are easily around 60 to 70 setups. If it is a small film, we can go anywhere and shoot. But going out to shoot with such a massive star cast is no ordinary task. We can only shoot if we keep the locations within our comfort zone. It has been almost a year since we built the Vizianagaram set. It is convenient to shoot whenever we need it. We built that set so that it adapts to all weather conditions.
The bat used by the hero in this also comes from a very natural production design. The way a local village player would make a bat using whatever raw materials he can find—that bat looks just as natural. He also has a specific mannerism. All of those nuances were crafted into it.
Tell us about your bond with Charan?
Charan appreciated every set I built. The train setup, the special song set, the wrestling arena... he really liked every single one. Many people who came to meet Charan also mentioned that the sets look extremely natural.
How did Charan get injured?
It happened during the wrestling in an action sequence. Even in that condition, Charan immediately returned to the shoot. Because if we didn't shoot that month, all the artists' dates would have been missed. That is why he came right back and completed it.
About the story of Peddi?
This is a one-of-a-kind film. When you walk out of the theatre, your eyes will definitely well up with tears. You will travel that deeply with Peddi's journey. That emotion will absolutely be there.
Sukumar recently said that Charan's performance in this movie will surpass 'Rangasthalam'. The reason is that there is that much strength in this story.
Comments
Post a Comment