தென்னிந்திய நடிகை பிரியா பவானி சங்கர் (actress Priya Bhavani) Shankar தலைமையில் வேளச்சேரியில் பிரம்மாண்டமாக ‘கலர்ஸ் 2.0’ வெல்னஸ் சென்டர் திறப்பு*

*தென்னிந்திய நடிகை பிரியா பவானி சங்கர் (actress Priya Bhavani) Shankar தலைமையில் வேளச்சேரியில் பிரம்மாண்டமாக ‘கலர்ஸ் 2.0’ வெல்னஸ் சென்டர் திறப்பு*
சென்னை: முன்னணி வெல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனமான ‘கலர்ஸ்’ தனது சேவைகளை சென்னை நகரில் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. வேளச்சேரி மகேஸ்வரி நகரில் 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘கலர்ஸ் 2.0’ வெல்னஸ் சென்டரை தென்னிந்திய நடிகை பிரியா பவானி சங்கர் சிறப்பாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் விளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறப்பு விழாவை நடத்தினர். அவருக்கு நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியா பவானி சங்கர், இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உடல்நலத்தை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டதாக தெரிவித்தார். அழகு என்பது வெளிப்புற தோற்றத்தில் மட்டும் இல்லை என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உண்மையான அழகு வெளிப்படும் என்றும் கூறினார். உடல் எடை கட்டுப்பாடு, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இத்தகைய வெல்னஸ் மையங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். சென்னை மக்களுக்கு சர்வதேச தரத்திலான சேவைகளை கொண்டு வருவது பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.
கலர்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் வெங்கட் சிவாஜி கூனா பேசுகையில், இரண்டு தெலுங்கு மாநிலங்களில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தங்கள் நிறுவனம் தற்போது தமிழ்நாட்டிலும் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாக கூறினார். கும்பகோணத்திற்கு பிறகு தற்போது சென்னை வேளச்சேரியில் புதிய பிரீமியம் மையத்தை தொடங்கியதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். கடந்த 22 ஆண்டுகளாக வெல்னஸ் துறையில் சேவை செய்து வரும் தங்கள் நிறுவனம், உடல் எடை கட்டுப்பாட்டின் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.
தற்போது நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட நியூட்ரிஷனிஸ்ட்கள், 100-க்கும் மேற்பட்ட நிபுணர் மருத்துவர்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், US-FDA அங்கீகாரம் பெற்ற நவீன கருவிகளின் உதவியுடன் சர்வதேச தரத்திலான வெல்னஸ் சேவைகளை ‘கலர்ஸ் 2.0’ மூலம் வழங்கி வருவதாக கூறினார்.
மேனேஜிங் டைரக்டர் டாக்டர் விஜய் கிருஷ்ணா பேசுகையில், மக்களின் மாறிவரும் உடல்நல தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மையம் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப சிறப்பு வெல்னஸ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆபரேஷன்ஸ் டைரக்டர் கிருஷ்ணம் ராஜு பேசுகையில், நாடு முழுவதும் டெர்மடாலஜி மற்றும் வெல்னஸ் சேவைகளை ஒருங்கிணைந்து வழங்கும் நிறுவனமாக ‘கலர்ஸ்’ தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார். அனுபவமிக்க டெர்மடாலஜிஸ்ட்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் திறமையான ஊழியர்கள் மூலம் தரமான சேவைகளை வழங்குவது நிறுவனத்தின் முக்கிய இலக்கு என்றும் கூறினார்.
5எம் மீடியா சார்பில் ஜெய்தீப் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், வெல்னஸ் துறை நிபுணர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேளச்சேரியில் துவங்கப்பட்டுள்ள ‘கலர்ஸ் 2.0’ மூலம் அதிநவீன வெல்னஸ் சேவைகள் மக்கள் அருகில் கிடைப்பதில் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
-

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie