TN 2026’ Movie- விமர்சனம்அரசியல் நையாண்டி படம் தவறவிடாதீர்கள் Rating 4/5
⁰‘TN 2026’ - விமர்சனம்
அமைதிப்படை படத்திற்குப் பிறகு நல்ல அரசியல் நையாண்டி படம் நடிகர்களின் அரசியல் மற்றும் பதவி ஆசைக்குப் பின்னால் கலகலப்பாக சொல்லி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் உமாபதி ராமையா,
வட மாநிலத்தை சேர்ந்த நட்டி நட்ராஜ், பிழைப்பை தேடி சென்னை வருகிறார் .அங்கு அறிமுகம் ஒரு இயக்குனர் மூலம் முதல் பட வாய்ப்பு கிடைக்கிறது. அவரது முதல் படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுவதோடு மக்கள் மனதில் அடுத்த எம் ஜி ஆர் என்ற இடத்தையும் பிடித்து விடுகிறார்.
பொள்ளாச்சியில் ஜமீன்தாராக இருக்கும் தம்பி ராமையா எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் . வளர்ந்து வரும் நட்டியை அடுத்த எம் ஜி ஆர் ஆக பார்க்கும் தம்பி ராமையா அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை சினிமாவில் உச்ச நடிகராக கொண்டு வருகிறார்
200 கோடி ரூபாய் வருமானத்தில் உச்ச நடிகராக இருக்கும் நட்டியை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக புதிய கட்சி ஒன்றை தம்பி ராமையா தொடங்குகிறார். 2026 ஆம் ஆண்டு நட்டிதான் தமிழக முதல்வர் என்ற நம்பிக்கையை அவர் மனதில் ஏற்படுத்துகிறார்.
இதனையடுத்து ஆளும் கட்சியினரால் நட்டிக்கு பல பிரச்சனைகள் வருகிறது. இந்நிலையில் நட்டிக்கு திடீர் என உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இறுதியில் நாயகன் நட்டி முதலமைச்சர் ஆனாரா? இல்லையா? அரசியலை விட்டு விலகினாரா? இல்லையா? என்பதே ‘‘TN 2026’ படத்தின் கதை.
குல்கந்த் குமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் இயல்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழை தவறாக உச்சரிக்கும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.அரசியலுக்கு வந்த பிறகு 200 கோடி சம்பளத்தை விட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லும் இடத்தில் இன்றைய அரசியல் தலைவராக இருக்கும் உச்ச நடிகரை நினைவுபடுத்துகிறார்.
ஜமீன்தாராக நடித்திருக்கும் தம்பி ராமையா தொடர் தூவியில் இருக்கும் நட்டியை உச்ச நடிகராக ஆக்க எடுக்கும் முயற்சிகள் ரசிக்க முடிகிறது. அரசியலுக்கு வழிகாட்டியாகவும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சியில் அசத்தியிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு. நட்டி மனைவியாக நடித்திருக்கும் சிருத்தா ராவ், பரதநாட்டிய கலைஞராக நடிப்பு மற்றும் நடனத்தில் அசத்தியிருக்கிறார். நடிகையாக வரும் சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு காட்சிகள் அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
ஒரு முன்னணி நடிகரின் வளர்ச்சி, வாழ்கை , அரசியல், ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் உமாபதி ராமையா இத்திரைப்படத்தில் சினிமாவில் சாதித்தவர்கள் அடுத்து காலடி எடுத்து வைப்பது அரசியல் என அரசியல் நையாண்டியை யாரும் குறை சொல்ல முடியாத விதத்தில் கதையை அழகாக கையாண்டு இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : நட்டி நட்ராஜ், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ,எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா
இசை : தர்புகா சிவா
இயக்கம் : உமாபதி ராமையா
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
Comments
Post a Comment