LIK) -Movie Review விமர்சனம்

’ (LIK)  -Movie Review  விமர்சனம்

2040 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட எஸ் ஜே சூர்யா. இனி எந்த காதலர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற செயலியை உருவாக்குகிறார்
இந்த செயலின் மூலம் பொருத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்யலாம். அவர் எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம். இந்த செயலி காதலர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மறுபக்கம் ஸ்மார்ட் போனால் தனது மகளை இழக்கும் சீமான் பசுமை உலகம் என்ற ஒரு இடத்தை உருவாக்குகிறார். இவரது மகன் பிரதீப் ரங்கநாதன் அப்பாவின் சொல்படி கேட்டு மொபைல் போனை பயன்படுத்தாமல் இருக்கிறார்.  இங்கு மொபைல் போனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மொபைலுக்கு அடிமையான குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வகுப்புகளை நடத்துகிறார்கள்.

இந்நிலையில் நாயகி கீர்த்தி ஷெட்டி சிறு வயது முதலே ஸ்மார்ட் போன் வழிகாட்டுதலில் வளர்ந்து கொள்கிறார். சமூக ஊடகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

இந்நிலையில் கீர்த்தி ஷெட்டியை  பார்த்ததும் பிரதீப் ரங்கநாதன் காதல் கொள்கிறார். அப்பாவிற்கு தெரியாமல் மொபைல் போன் ஒன்றை வாங்கி (LIK) செயலியில் தன்னை இணைத்துக் கொண்டு கீர்த்தி ஷெட்டியுடன்  நட்பாக பழகி வருகிறார்.
இதனையடுத்து இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த நினைக்கும் வேளையில் (LIK)  செயலி இவர்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறுகிறது. இதனால்  கீர்த்தி ஷெட்டி பிரதீப் ரங்கநாதனை  விட்டு பிரிகிறார்

இதை நேரில் பார்க்கும் அப்பா சீமான் மகன் தன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டான்  என்று  பிரதீப்பிடம் பேசாமல் இருக்கிறார்.  இறுதியில் பிரதீப்  - கீர்த்தி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? அப்பா சீமான் மகனிடம் பேசினாரா? இல்லையா?  என்பதே  'இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK). படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் துறுதுறுவென இருக்கும் இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், பாசம், நட்பு, சண்டை , நடனம் , எமோஷனல் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.  30 நாட்களுக்குள் காதலியுடன் சேர அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் சிரிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். காதல் வலியை  உணர்வுகளால்  அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். தாய் பாசத்திற்கு ஏங்குபவராக  சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
LIK செயலியின் நிறுவனராக நடித்திருக்கும் எஸ்.ஜெ.சூர்யா,  தன்  நிறுவனத்தை காப்பாறுவதற்காக எதையும் செய்யக்  கூடிய கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்திருக்கும் சீமான் இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். தமிழர் என்ற உணர்வோடு வாழ்ந்திருக்கிறார். அவர் சொல்லும் அறிவுரைகள் அனைவரும் பொருந்தும் ஒன்றாக இருக்கிறது.

பிரதீப் தோழியாக வரும் கெளரி கிஷன், யோகி பாபு, பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்திருக்கும் ஷாரா  நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள்.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம், பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. ரவி வர்மனின் ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.

LIK என்ற செயலியை மைய கருவாக வைத்து காதல் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்  விக்னேஷ் சிவன்,  இத்தகைய செயலியால் காதலர்கள் உண்மையான காதலை அறிந்துக் கொள்ள முடியுமா? முடியாத ? என்று தெளிவாக கூறியிருக்கிறார். மொபைல் போனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி கிஷன்
இசை :  அனிருத்
இயக்கம் : விக்னேஷ் சிவன்,
மக்கள் தொடர்பு : யுவராஜ்



 


 

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie