லீடர்’ -  விமர்சனம்அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான படமாகவும் அமைந்திருக்கிறது: Leader | ( 3.5/5 ⭐️)

’’ - லீடர்’ -  விமர்சனம்அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான படமாகவும் அமைந்திருக்கிறது
: Leader | ( 3.5/5 ⭐️) 
[Leader - படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி இல்லாமல் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் படம் நகர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான படமாகவும் அமைந்திருக்கிறது
: Leader | ( 3.5/5 ⭐️) 
ஹாங்காங்கில் இருக்கும் வில்லன் சந்தோஷ் எளிதில் வெடிக்கக்கூடிய ரசாயன பொருள் அடங்கிய கண்டெய்னரை  தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பி  வைக்கிறார். அந்த கண்டெய்னரை பாதுகாக்கும் பொறுப்பு  பாகுபலி பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகம்   கண்டெய்னரில் இருக்கும் மர்ம பொருள் என்ன? என்று அறிந்து கொள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா முயற்சிக்கிறார். மறுபக்கம் தூத்துக்குடியில் தன் மகளுடன் வசிக்கும் லெஜெண்ட் சரவணன் கார் மெக்கானிக் வேலை பார்த்து  வருகிறார். துறைமுகத்திற்குள் அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து அந்த கண்டெய்னரை பிடிக்க ஆண்ட்ரியா நினைக்கிறார்.

அதற்காக ஆண்ட்ரியா,  சரவணன் மகளை வைத்து திட்டம் போட பிரபாகரnனையும் கண்டெய்னரையும் சரவணன் வெடிக்க வைத்து விடுகிறார்.  காவல்துறை உயர் அதிகாரியான ஷாம், சரவணனின் அதிரடி நடவடிக்கையால் சந்தேகம் அடைய சரவணன் பற்றி ரகசியமாக விசாரிக்கையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கிறது.
இதே சமயம் சந்தோஷ் பிரதாப் சரவணனை பழிவாங்க தூத்துக்குடி வருகிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாப் லெஜண்ட் சரவணனை பழி வாங்கினாரா? இல்லையா? போலீஸ் உயர் அதிகாரி ஷாம் சரவணனை கைது செய்தாரா? இல்லையா?  சரவணன் மனைவி பாயல் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா? என்பதே ’லீடர்’ படத்தின் கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட் சரவணன் இரண்டாவது படத்திலேயே அதிரடி நாயகனாக மிரட்டியிருக்கிறார் . காதல், பாசம், செண்டிமெண்ட் , என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.  மகளிடம் தான்தான் அப்பா என்று சொல்ல முடியாமல் தவிக்கும் இடம் பாராட்டுக்குரியது,  படத்தில் ஆரம்பத்தில் அமைதியாக வருபவர் அடுத்தடுத்த காட்சிகளில் காட்டும் அதிரடி ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத் பார்க்க அழகாவும் அளவான நடிப்பால் கவர்கிறார். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். வில்லனாக மூன்று வேடங்ககளில் நடித்து மிரட்டியிருக்கிறார்  சந்தோஷ் பிரதாப்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஷாம்,  பாகுபலி பிரபாகரன், லால், விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் என மற்ற கதாபாத்திரங்களில்  நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு  இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை அதிரடியாக உள்ளது. வெங்கடேஷ்.எஸ், ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
அப்பா - மகள் பாசத்தை மைய கருவாக வைத்து அதில் அதிரடி சண்டை காட்சிகளை கலந்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை அழகாகவும் அதிரடியாகவும் கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.


நடிகர்கள்  :  லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா ஜெர்மையா, சந்தோஷ் பிரதாப், லால்
இசை :  ஜிப்ரான்
இயக்கம் : ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்



 

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie