நீளிரா - விமர்சனம்

நீளிரா -  விமர்சனம்
1988 ஆம் ஆண்டு வட இலங்கையில் இலங்கை ராணுவத்திற்கும்,
தமிழ் போராளிகளுக்கும் யுத்தம் நடந்து  வருகிறது.  அப்போது  இந்தியாவிலிருந்து அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இந்திய துணை ராணுவம் சென்றது.  அங்குள்ள கிராமத்தில்  கபிலா வேணுவின் மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த திருமணத்தை நடத்துவதற்கு கூட இந்திய அமைதிப்படை இடமும், இலங்கை இராணுவத்திடமும் அனுமதி  பெற்று திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் என  கேப்டன் நவீன் சந்திரா  தலைமையிலான  இந்திய இராணுவ வீரர்கள்  தற்செயலாக அந்த வீட்டை சுற்றி முற்றுகை இடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் வீட்டிற்குள் நுழையும் இராணுவ வீரர்கள்  வீட்டுக்குள் தமிழ் போராளிகள் இருக்கிறார்களா என்று சல்லடை போட்டு தேடுகிறார்கள். துப்பாக்கி முனையில் திருமண வீட்டாரை மிரட்டுகிறார்கள்.

இறுதியில் அந்த வீட்டில் திருமணம் நடந்ததா? இல்லையா?  இந்திய ராணுவ வீரர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதே  ‘நீளிரா’   படத்தின் மீதிக்கதை.

இந்திய இராணுவ கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா அந்த கதாபாத்திரத்திற்கு  பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கண் பார்வையாலே மிரட்டுகிறார். ஒரு பக்கம் கடமை  மறுபக்கம் அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்று  நியாயத்தின்  பக்கம் நின்றியிருக்கிறார்.
தமிழ் போராளியாக நடித்திருக்கும் சனந்த்  போர் குணம் கொண்டவராகவும் மறுபக்கம் காதலை நினைத்து உருகி அழுகும் இடத்தில் அனைவரின் மனதில் தனி இடத்தை பிடிக்கிறார். வாசுகியாக நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர் போரின் வழியை சுமந்து செல்லும் கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.

தமிழ் குடும்பத்தை தலைவியாக நடித்திருக்கும்  கபிலா வேணுவின் நடிப்பு அருமையாக இருந்தது. மணப்பெண்ணாக சிந்து குமரேசன் நடிப்பு சிறப்பாக உள்ளது.  மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கே-யின் இசையில் திருமண பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம், பின்னணி இசை  கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.  செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.

இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சோமீதரன் இத்திரைப்படத்தில் திருமண வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்று யாரும் யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை நகர்த்தி சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.


நடிகர்கள் : நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், விது ,கஜராஜ் ,சித்து குமரேசன்
இசை : கே
இயக்கம் : சோமீதரன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்


 



 


 

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie