காளிதாஸ் 2’ - விமர்சனம்

’காளிதாஸ் 2’  - விமர்சனம்
சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதே அடுக்குமாடி குடியிருப்பில் அபர்ணதி - அனந்த் நாக், தம்பதிகள்  4 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

மறுநாள் புதுவருடம் பிறப்பதால் அந்த குடியிருப்பில் ஆட்டம், பாட்டு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே சமயம் அபர்ணாதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. இதனையடுத்து குழந்தையை கண்டுபிடிப்பதற்காக  காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ அங்கு வருகிறார்கள்.
அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி ஏற்கனவே சிறுமி கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர் என்பது தெரிய வருகிறது.  அவரை கைது செய்து விசாரிக்கையில் காணாமல் போன குழந்தையின் சடலம்  கிடைக்கிறது.
இதே வேளையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் மற்றொரு சிறுமியை உடல் கிடைக்க அதை பார்த்து பரத் மற்றும் பவானி ஸ்ரீ  இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இறுதியில் பரத் மற்றும் பவானி ஸ்ரீ  இருவரும் சேர்ந்து  உண்ணையான  கொலைகாரன் யார் ? என்பதை கண்டுபிடித்தார்களா ? இல்லையா ?   இளைஞர் அஜய் கார்த்தி  சிறையில் இருந்து வெளியே வந்தாரா ? இல்லையா ? என்பதே  ’காளிதாஸ் 2’ .
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை  வெளிப்படுத்தியிருக்கிறார். காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்டும் வகையில் உள்ளது. உடை, நடை, பேச்சு , சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை இவர் நல்லவரா கெட்டவரா என்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கதாபாத்திரத்தை உள் வாங்கி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ,  நேர்மையான  அதிகாரியாக யாருக்கும் அடி பணியாத கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ’ சங்கீதா, யாரும் யூகிக்க முடியாத முக்கிய  கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார். 

அபர்ணதி, அனந்த் நாக், வழக்கறிஞர்  பிரகாஷ் ராஜ், கிஷோர் , சிறுமிகள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற  சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது., பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளது.  சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது.

சிறுமி கொலை சம்பவத்தை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்  ஸ்ரீ செந்தில்  இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை யார் ?  கொலைகாரன் என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

நடிகர்கள் :  பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர்
இசை : சாம்.சி.எஸ்
இயக்கம் : ஸ்ரீ செந்தில்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie