முஸ்தபா முஸ்தபா’ - விமர்சனம்

‘முஸ்தபா முஸ்தபா’  -  விமர்சனம்
நண்பர்களான சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். மருத்துவரான நாயகி மோனிகாவை பார்த்ததும் சதீசுக்கு காதல் வர  இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

திருமணம் நடக்க சில நாட்களுக்கு இருக்க சதீஷ், ஐஸ்வர்யா தத்தாவுடன்   படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது.  சுரேஷ் ரவி  மூலம் இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் சதீஷ்,  மோனிகாவுக்கு விஷயம்  தெரிந்தால் திருமணத்தை நிறுத்தி விடுவார் என்ற பயத்தில்,  திருமணத்திற்கு முன்பு அந்த வீடியோவை கண்டுபிடித்து அளிக்க நினைக்கிறார்.

இறுதியில் நாயகன்  சதிஷ் வீடியோ பதிவை அளித்தாரா? இல்லையா? அந்த வீடியோவை பதிவேற்றம் செய்தது யார்? சதிஷ் - மோனிகா இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா?  என்பதே ‘முஸ்தபா முஸ்தபா’  படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சதிஷ் கதைக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்.  நட்பால் காதலுக்கு ஏற்படும் பிரச்சனையை எப்படி சரி செய்கிறார் என்பதை  தனது  காமெடி கலந்த கதாபாத்திரத்தின்  மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறார்.சதிஷ் காதலியாக நடித்திருக்கும்  மோனிகா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
மற்றொரு நாயகனாக  நடித்திருக்கும் சுரேஷ் ரவி,  கலகலப்பு நிறைந்த கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.  சுரேஷ் ரவி காதலியாக நடித்திருக்கும் மானசாவிற்கு படத்தில் நடிப்பதற்கு காட்சிகள் குறைவாக உள்ளது.

சதிஷ் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல்  சிரிக்க வைக்கிறார். படம் அடுத்த கட்டத்திற்கு நகர துணை நிக்கிறார். சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி என மற்ற வேடங்களில்  நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற நடிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது.. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

காதல், காமெடி, நட்பு  ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரவீன் சரவணன், இத்திரைப்படத்தில் நண்பனால் காதலுக்கு ஏற்படும் பிரச்சனையை நண்பனை கொண்டே எப்படி சரி செய்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் .

நடிகர்கள் : சதீஸ், சுரேஷ் ரவி, மோனிகா, மானசா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா
இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின்
இயக்கம் : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர் (D'one)


 

Comments

Popular posts from this blog