ஹேப்பி ராஜ்’ - விமர்சனம்

’ஹேப்பி ராஜ்’  - விமர்சனம்
நாயகன் ஜி.வி.பிரகாஷ்  தன்னுடன் கல்லூரியில் படிக்கும்  பிரார்த்தனாவிடம் காதலை சொல்ல  ஜி.வி.பிரகாஷ்  அப்பாவால் காதல் கைகூடாமல் போகிறது. ஜி.வி.பிரகாஷ்  அப்பாவை விட்டு விலகி செல்ல நினைக்கையில் பெங்களூரில் வேலை கிடைக்கிறது. அங்கு நாயகி ஸ்ரீ கெளரி பிரியாவை  பார்க்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
பணக்காரரான  ஸ்ரீ கெளரி பிரியாவின்  அப்பா  அப்பாஸ், மகள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். இரு வீட்டாரும் பெங்களூரில் கூடி பேசி திருமண ஏற்பாடுகள் நடக்க இருக்கும் நிலையில் ஜார்ஜ் மரியன் - அப்பாஸ் இருவரும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது . இதனால் திருமணம் நின்றுவிடுகிறது.
தனது  திருமணம் நின்று போனதற்கு தந்தை தான் காரணம் என்று நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், நினைக்கிறார். இறுதியில்   ஜி.வி.பிரகாஷ் - ஸ்ரீ கெளரி பிரியா திருமணம் நடந்ததா ? இல்லையா ?   ஜி.வி.பிரகாஷ் அப்பாவின் அன்பை புரிந்து கொண்டாரா? இல்லையா? என்பதே  ’ஹேப்பி ராஜ்’ படத்தின் கதை.
ஹேப்பி ராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் துடிப்பு மிக்க இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், பாசம், நடனம்  என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.  குறிப்பாக இறுதி காட்சியில் அப்பா மீது காட்டும் அணைப்பும் அக்கறையும் படம் பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி பிரியா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் அப்பாஸ், குறை சொல்ல முடியாத அளவுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன்,இதுவரை காமெடி  கதாபத்திரத்தில் பார்த்த நமக்கு இந்த படத்தின் மூலம் குண சித்திர கதாபத்திரத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், மதுரை முத்து மற்றும் அதிர்ச்சி மதன் , பிரார்த்தனா நாதன் என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்  படத்திற்கு பலம் சேர்க்கிறது. மதன் கிரிஸ்டோபரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
தந்தை - மகன் இடையிலான புரிதலை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இத்திரைப்டத்தில் காதல், பாசம், உருவ கேலி , ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

நடிகர்கள் : ஜீ வி பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா,  ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், அப்பாஸ்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
இயக்கம் : மரியா ராஜா இளஞ்செழியன்
மக்கள் தொடர்பு : ரேகா

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie