திவ்யா திரைவிமர்சனம்

திவ்யா திரைவிமர்சனம்

RJP இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து தயாரித்து இயக்கி வெளியாகியுள்ள படம் திவ்யா. இவருடன் கதாநாயகியாக கேத்தி, மற்றும் செந்தில், பவுன்ராஜ், அனந்த் ராம், கலாவதி, சபி, ஜிவி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

கதை 

கதாநாயகன் RJP தனது நண்பர்களுடன் கல்லலூரியில் அடாவடித்தனம் செய்துகொண்டு படித்து வருகிறார்கள். அதே கல்லூரிக்கு கதநாயகி கேத்தா வந்து சேர முதல் சந்திப்பிலேயே அவரை ராக்கிங் செய்ய  மோதல் உருவாகிறது. பின்  இருவருக்கும் காதல் உருவாகிறது. இவர்கள் சேர ஜாதி தடையாக இருக்கிறது. கதாநாயகி அப்பாவுக்கு இவர்கள் காதல் தெரிய வர மகளுக்கு சொந்தத்தில் நிச்சயம் செய்கிறார். பின் காதலர்கள் ஊரைவிட்டு ஓட முயல வில்லன் செந்தில் அவர்களை கண்டுபிடித்து தாக்க  போலிஸ் அவர்களை அழைத்து வந்து ஸ்டேஷனில் விசாரிக்க அதன் பிறகு அவர்கள் காதல் நிறைவேறியதா? முடிவு என்ன என்பதே படத்தின் கதை. 
கதாநாயகனாக RJP சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாகியாக கேத்தி தன் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகன் நண்பர்களாக சபி, ஜிவி, தாத்தாவாக பவுன்ராஜ், கேத்தி அப்பாவாக அனந்த் ராம், அம்மாவாக கலாவதி வில்லனாக செந்தில் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சங்கர் ராம் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. செல்வக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். 
ஆவணக்கொலை காதல் கதையை இயக்குநர் RJP எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பாராட்டுக்கள். #PROSaran

Comments

Popular posts from this blog