காதல் ரீசெட் ரிப்பீட்’ - விமர்சனம்

‘காதல் ரீசெட் ரிப்பீட்’  -  விமர்சனம்
பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகி  ஜியா, அர்ஜுன் அசோகன் நடத்தும் இசைக்குழுவில் சேர்ந்து பாடி வருகிறார். ஜியா - அர்ஜுன் இருவரும் காதலிக்கிறார்கள்.இந்நிலையில் ஜியாவின்  அப்பா  ஜெயபிரகாஷ் வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார்.

இதற்கிடையில் ஸ்காட்லாந்தில் நடக்கும் இசை போட்டியில் கலந்து கொள்ள ஜியா ஆசைப்படுகிறார். ஆனால் அவரால் செல்ல முடியாத சூழ்நிலை இதையடுத்து போட்டியில் கலந்து கொள்ள அர்ஜுன் இசைக்குழு மட்டும் ஸ்காட்லாந்தில் செல்கிறார்கள்.
திருமணத்தை நிறுத்தும் ஜியா ஸ்காட்லாந்திக்கு  செல்கிறார். அங்கு அர்ஜுன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் ஜியா மலை உச்சில் இருந்து கீழே குதிக்கிறார்  அவரை காப்பாற்றும் நாயகன்  மதும்கேஷ் தான்தான்  காதலன் என்று கூறுகிறார்.

ஏனெனில் ஜியாவிற்கு  அந்த விபத்தில் கடந்த 2 வருடம் நடந்தது எல்லாம் மறந்து போகிறது. இன்று நடக்கும் சம்பவங்கள் மறுநாள் மறந்துவிடும் . இவர்களுக்கு உதவும் எம் எஸ் பாஸ்கரிடம் தான் 10 வயதில் இருந்தே ஜியாவை ஒரு தலையாக காதலிப்பதாகவும் அவருக்கு தெரியாமலே மறை முகமாக உதவி வருவதாகவும் கூறுகிறார்.

ஒரு கட்டத்தில் ஜியாவை பார்க்கும் அர்ஜுன் அவரை தன்னுடன் அழைத்து செல்ல முயற்சிக்கிறார். இறுதியில் நாயகி ஜியா அர்ஜூனுடன் சென்றாரா? இல்லையா? ஜியாவின் பாடகியாக  ஆகும் ஆசையை  மதும்கேஷ் நிறைவேற்றினாரா? இல்லையா?  ஜியாவிற்கு பழைய நினைவு மீண்டும் வந்ததா? இல்லையா ? என்பதே ‘காதல் ரீசெட் ரிப்பீட்’  படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் மதும்கேஷ் அறிமுக நாயகன் போல இல்லாமல் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஒரு தலையாக காதலிபப்து , காதலிக்காக மலை உச்சியில் இருந்து குதிப்பது, ஓடி உதவி செய்வது , காதலை சொல்ல முடியாமல் தவிப்பது என அனைத்து உணர்வுகளையும் அழகாக கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும்  ஜியா, அழகு தேவதையாக படம் முழுவதும் வலம் வருகிறார். ஒவொரு நாளும் காலையில் தான் யார் என்று சத்தம் போட்டு கேட்கும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.  

ஜியா காதலராக வரும் அர்ஜுன் அசோகன் மலையாளத்தில் நன்கு அறிந்தவர் என்றாலும் தமிழில் அறிமுக படத்திலேயே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், காமெடி , நடனம் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
மருத்துவராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்க முடிகிறது. அப்பாவாக நடித்திருக்கும் நாயகி அப்பாவாக நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பார் ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக உளள்து.  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

ஒரு முக்கோண காதல் கதையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்  விஜய் இத்திரைப்டத்தில் காதல் கதையாக கொண்டு செல்லாமல் காமெடி , கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார்.  ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.


நடிகர்கள் : ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர்
இசை :  ஹாரீஸ் ஜெயராஜ்
இயக்கம் : விஜய்
மக்கள் தொடர்பு : யுவராஜ்  

Comments

Popular posts from this blog