தாய் கிழவி’ விமர்சனம்

‘தாய் கிழவி’ விமர்சனம்
கணவனை இழந்த ராதிகாவிற்கு சிங்கம்புலி,  அருள்தாஸ்,  பால சரவணன் என மூன்று மகன்களும் ரைச்சல் என்ற மகளும் இருக்கிறார்கள்.  மூதாட்டியான  ராதிகா , தன் கடின உழைப்பால் சேர்த்து வைத்த சொத்துக்களை  தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஊர் மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் ராதிகா , அதை வசூலிப்பதில் கடுமையாக நடந்துக் கொள்கிறார்., ஊர் மக்கள் அவரை பார்த்தாலே பயப்படுவதோடு, அவர் எப்போது இறப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் திடீரென்று ராதிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனால், ஊர் மக்களும், அவரது மூன்று மகன்களும், ஒரு மருகனும் சொத்துக்காக அவரது இறப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

இதனையடுத்து அங்கு வரும் நகைக்கடை முதலாளியான இளவரசு மூலம் ராதிகா 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விபரம் மகன்களுக்கு தெரிய வருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகையை கைப்பற்றுவதற்காக  தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என்று மூன்று மகன்களும் முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் மூன்று மகன்களும் ராதிகாவின் உயிரை  காப்பாற்றினார்களா?  இல்லையா?  ராதிகாவிடம் இருக்கும் 160 பவுன் தங்க நகைகளை கைபப்ற்றினார்களா? இல்லையா? என்பதே ‘தாய் கிழவி’  படத்தின் கதை.
பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதிகா, தாய் கிழவியாக வாழ்ந்திருக்கிறார் . வட்டிக்கு பணம் கொடுப்பது அதை வசூலிக்க செய்யும் அராஜகம், மகள் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக எடுக்கும் அதிரடி முடிவு , பெண்கள் எப்படி இருக்க வேணடும் என்று கூறும் காட்சி என அனைத்திலும் அனுபவ நடிப்பால் கவனம் பெறுகிறார்.
ராதிகாவின் மூத்த மகனாக வரும் சிங்கம்புலி,  நடிகர் கமல் ரசிகராக ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார். இரண்டாவது மகனாக வரும் அருள்தாஸ், ஆட்டோ ஓட்டுபவராக வருகிறார்.மூன்றாவது மகனாக வரும் பாலசரவணன், பூக்கடை வைத்திருப்பவராக நடிப்பு ரசிக்க முடிகிறது. மருமகள்களாக நடித்திருப்பவர் அனைவரும் நடிப்பு அருமை.

மகளாக நடித்திருக்கும் ரைச்சல் ரபேக்கா, மருமகனாக நடித்திருக்கும் முத்துக்குமார், உறவினராக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக நடித்திருக்கும் இளவரசு என படத்தில் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பார் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.  விவேக் விஜயகுமார், ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
கிராமத்தில் வாழும் தாய் கிழவி என்ற கதாபாத்திரத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இத்திரைப்படத்தில் பெண்கள் தைரியமாகவும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சொத்து, தங்கம், பணம் இவைகளை விட தாயே சிறந்தவர் என்ற கருத்தை சொல்லியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

நடிகர்கள் : ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், முத்துகுமார், பாலசரவணன், ரைச்சல் ரெபக்கா, இளவரசு, ஜார்ஜ் மரியான்
இசை : நிவாஸ் கே.பிரசன்னா
ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
 


 
 
 

Comments

Popular posts from this blog