LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்

LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”  - விமர்சனம்
படவா கோபி, வினோதினி தம்பதிகளின் மூத்த மகன் நாயகன் ஆதவ் கிருஷ்ணா கல்லூரியில் படித்து வருகிறார். படிப்பில் திறமைசாலியான  ஆதவ் சக மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். ஒரு நாள் இதே  கல்லூரியில் படிக்கும் நாயகி சிம்ரனுக்கு ரவுகளால் ஆபத்து வர ரவுகளிடம் இருந்து சிம்ரனை ஆதவ் காப்பாறுகிறார்.
இதனையடுத்து ஆதவ், சிம்ரன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.  இந்நிலையில் சிம்ரன் சிறுவயதிலேயே அவருடைய அம்மா வேறுறொரு நபருடன்  காசிக்கு சென்று விடுகிறார். அம்மா இல்லாமல்  அப்பாவின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார் நாயகி சிம்ரன்.
இந்நிலையில் ஆதவை தன்னுடன் அழைத்துச் செல்லும் சிம்ரன் காசியில் இருக்கும் அம்மவை பார்க்க செல்கிறார். சென்ற  இடத்தில் அம்மாவை பார்ப்பதற்காக தனியே செல்லும் நாயகி சிம்ரன் காணாமல் போகிறார்.

இதனையடுத்து  ஆதவை கைது செய்யும் போலீஸ் அவரை சிறையில் அடைகிறது. இறுதியில் நாயகி சிம்ரனை கடத்தியது யார்? காணாமல் போன நாயகி சிம்ரன் கிடைத்தாரா? இல்லையா?  சிறையில்  இருந்து நாயகன் ஆதவ் வெளியே வந்தாரா? இல்லையா ? என்பதே LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” படத்தின் கதை.
கல்லூரி மாணவராக நடித்திருக்கும் நாயகன் ஆதவ் கிருஷ்ணா துடிப்பு மிக்க இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆட்டம், பாட்டம், காதல், குடும்பம், நடனம், தவிப்பு   என அனைத்திலும் அசத்தியிருக்கிறார் . குறிப்பாக சண்டையில் மிரட்டுகிறார்.  
கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சிம்ரன் அத்வானி நாயகனை துரத்தி துரத்தி காதலிக்கும் காதலியாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

நாயகனின் அப்பா , அம்மாவாக நடித்திருக்கும் படவா கோபி, வினோதினி சரியான தேர்வாக இருக்கிறார்கள்,  ஜாவா சுந்தரேசன் வரும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. மற்ற கதாபாத்திரங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அஷ்வமித்ரா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது. NS.சதீஷ் குமார் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

காதல் கதையை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கும்  இயக்குநர் ஆர்.மகாலட்சுமி முருகன் இத்திரைப்படத்தின் முதல்பாதி காதல், குடும்பம், என கதை  நகர இரண்டாம் பாதி காணாமல் போன நாயகியை தேடி அலையும் நாயகன் , சஸ்பென்ஸ், எமோஷனல்  என கதையை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

நடிகர்கள் : ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன்
இசை : அஷ்வமித்ரா
இயக்கம் : ஆர்.மகாலட்சுமி முருகன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)

Comments

Popular posts from this blog