புதிய குறும்படம், ' The Last Bus

 ராகவேந்திரா பிலிம் சார்பில் சுமன் இயக்கி தயாரித்துள்ள புதிய குறும்படம், 'தி லாஸ்ட் பஸ்'. துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி ராமச்சந்திரன், பரதா, சதீஷ், வெங்கடேஸ்வரா, யாஷா, தெய்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவா இசையமைத்துள்ளார். 
தேர்வில் தோல்வியடைந்த 16 வயது மாணவி, தாயின் திட்டுக்கு ஆளாகி, மனம் வெறுத்துப்போய் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் கடைசி இரவு பஸ்சில் ஏறி புறப்படுகிறாள். அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினைகள் சஸ்பென்ஸ் - திரில் கதைக்களத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. 
'தி லாஸ்ட் பஸ்' திரைப்படம், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்தவகையில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதை இந்த படம் தட்டி தூக்கியிருக்கிறது. 

''இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. 39 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் அடுத்தடுத்த சர்வதேச பட விழாக்களிலும் திரையிடப்படும். விரைவில் திரைக்கு வருகிறது'', என்கிறார் சுமன். 
 இக்குறும்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர் 
ஆர்.அரவிந்தராஜ் ,கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், பி.ஆர்.ஓயூனியன் தலைவர் என்.விஜய முரளி ஆகியோர் க #லந்து கொண்டு வாழ்த்தி.  venkat PRO

Comments

Popular posts from this blog