சீதா பயணம் ‘ - விமர்சனம்

‘சீதா பயணம் ‘ - விமர்சனம்
சிறுவயதில் அம்மாவை இழக்கும் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் அப்பா சத்யராஜ் அரவணைப்பு வளர்ந்து வருகிறார். சமையல் கலை நிபுணருக்கான படிப்பை முடித்தவர் பிரபல சமையல் கலைஞர் நடத்தும் ஒர்க் ஷாப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்கிறார் 
காரில் செல்லும் வழியில் நாயகன்  நிரஞ்சனை  சந்திக்க மதுரைக்கு செல்லும் வழியில் இருக்கும் சீதா புரத்தில் இறக்கி விட சொல்கிறார்.  முதலில் லிப்ட் தர மறுக்கும் ஐஸ்வர்யா பிறகு அவரை அழைத்துச் செல்கிறார்.
இருவரும் சாலையில் பயணிக்கும் போது பள்ளி  சிறுவர்களை சந்திக்கும் ஐஸ்வர்யா பிறகு அடிதடி வேலை  செய்யும்  அர்ஜுனை பார்க்கிறார்.  வழியில் பழம் விற்கும்  சிறுமி, டீக்கடை நடத்தும் கோவை சரளாவை சந்திக்க பிறகு  நாயகன் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விடுகிறார். இறுதியாக ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்
அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து  உயிர்  பிழைக்கும் ஐஸ்வர்யா  தான் சந்தித்த அனைவருக்கும் நன்றி கூறி இனிப்பு வழங்க வேண்டும் என்று அப்பா சத்யராஜிடம் கூறுகிறார்.

இதனையடுத்து முதலில் நாயகன் நிரஞ்சனுக்கு நன்றி சொல்ல நினைத்து அவர் ஊருக்கு செல்கிறார். இதே சமயம் ஐஸ்வர்யா, நிரஞ்சனால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதியின்  தம்பி அர்ஜுன் மூலமாக இவர்களை கொலை செய்ய சொல்கிறார்.

இதே வேளையில்  அர்ஜுனன் நேரில் சந்தித்து நன்றி சொல்ல ஐஸ்வர்யாவுடன்  நிரஞ்சன்  சொல்கிறார் இறுதியில்  ஐஸ்வர்யா மற்றும் நிரஞ்சனை அர்ஜுன் கொலை செய்தாரா?  இல்லையா ?  ஐஸ்வர்யா தான் சந்தித்த அனைவருக்கும் நன்றி கூறினாரா? இல்லையா ?  உண்மையில் நிரஞ்சன் யார் ? என்பதே படத்தின் மீதிக்கதை.
சீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார். அப்பாவை அம்மாவாக பார்ப்பது, மற்றவர்களுக்கு உதவுவது, காதல், நடனம் , சென்டிமென்ட் என அனைத்திலும் உணர்வு பூர்வமாக நடிப்பபை வழங்கியிருக்கிறார்.  

மருத்துவராக நடித்திருக்கும் அறிமுக நாயகன் நிரஞ்சன் எதார்த்த நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்பம், காதல், நடனம், சண்டை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ் தனது  அனுபவ நடிப்பின் முலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தாத்தாவாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் நடிப்பு படத்திற்கு பலமாக இருக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் வரும் அர்ஜுன் ஷார்ஜா மற்றும் துருவ ஷார்ஜா இருவரின் நடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. கோவை சரளா, சரண் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உளள்து. ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.

அப்பா - மகள் பாசம், குடுமப் உறவுகள், குழந்தைகள் என அனைத்தையும் மைய கருவாக வைத்து திரைப்பட கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை யாரும் யூகிக்க முடியாத வகையில் கதையை மிக நேர்த்தியாக நகர்த்தி சென்றிருக்கிறார்.  ரசிகர்கள் முதல் குடும்பங்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதத்தில் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.


நடிகர்கள் : ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், அர்ஜுன், துருவா சர்ஜா , சத்யராஜ், பிரகாஷ் ராஜ்,
இசை : அனுப் ரூபன்ஸ்
இயக்கம் : ஆக்ஷன் கிங் அர்ஜுன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)



 

Comments

Popular posts from this blog