சிவ சம்போ' சினிமா விமர்சனம்

'சிவ சம்போ' சினிமா விமர்சனம்
 கதாநாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கதாநாயகியோ கடந்த கால சச்சரவான சில சம்பவங்களால்  தனது காதலை அவனிடம் சொல்லத் தயங்குகிறாள்.  சில நாட்களில்  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இது கடந்தகால கதையாக இருக்க, நிகழ்காலத்தில் நாயகன் தன் மனைவி இறந்துவிட்டதாக கருதி அதற்கு காரணமானவர்களை பழி வாங்கப்பட்டதாக  திரைக்கதை பரபரக்கிறது.
கதாநாயகிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்ன? அவள் இறப்புக்கு காரணம் என்ன? என்பதெல்லாம் பெரும்பாலான புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியிருக்கிற 'சிவ சம்போ'வின் மீதிக்கதை.
ஹீரோ தில் நட்ராஜ் கதையில் போலீஸ் ஆஃபீஸர் என்றாலும் அதற்கேற்றபடி மிடுக்கான தோற்றத்தை ஓரளவுக்கு கொடுக்கிறார்.காதல் மனைவியை சீரழித்தவர்களை பழி வாங்க களமிறங்கும்போது கோபத்தின் கோபத்தின் உச்சத்தை  காட்டுகிறார். இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம் என்று  தோன்றுகிறது. 
கிராமத்து லட்சணம் கொண்ட ஹீரோயின் ஷிவானி திருமணம் என்ற பெயரில் தன்னை நாசமாக்கியவர்களை கொன்றழிக்கும்போது காட்டும் வெறித்தனம் மிரட்டலாக இருக்கிறது. காதலும் காதல் சார்ந்த காட்சிகளில் பரவசமாக இருக்கிறது.

இப்படத்தை இயக்கியிருக்கிற பகவதி பாலா அப்பாவி பெண்களைக் குறிவைத்து, விதவிதமான தோற்றங்களில் சென்று, அவர்களை திருமணம் செய்து அடிமையாக்கி, தவறான செயல்களுக்கு பயன்படுத்தும் கொடூர வில்லனாக தெரிகிறார். அவரது மோசடிகளுக்கு துணையாக நிற்கும் பெண்கள்  அராஜகங்களில் வீரியம் அதிகமாகயிருக்கிறது.
மோசடிப் பேர்வழிகளுக்கு உதவுகிறவராக காமெடி நடிகர் செந்தில் காட்டும் வில்லத்தனம் பரவாயில்லை. 

அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருந்துகொண்டு, தன்னுடைய இச்சைக்கு ஏழை எளிய பெண்களை பயன்படுத்துபவராக வருகிற முதியவரிலிருந்து மற்றவர்களின் நடிப்பும் பார்க்கலாம் 

இமான் அண்ணாச்சி திருச்சி சாதனாவும் சேர்ந்து அடிக்கும்  லூட்டியும் படத்தில் உண்டு.

பாடல் வரிகளுக்கு இசை மெருகூட்டியிருக்கும் 
ஏ.சி ஜான்பீட்டரும் பின்னணி இசையை காட்சிகளுக்குப் போதுமானதாக கலந்திருக்கிறார் தேவா.

ஒளிப்பதிவில்  கவனம் செலுத்தி இருக்கலாம் 

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நபர் பலரை திருமணம் செய்கிற மோசடி விவகாரத்தை விவகாரத்தை  கிரைம் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பகவதி பாலா. குறைகள் காணப்பட்டாலும் படம் தருகிற விழிப்புணர்வு சமூகத்துக்கு அவசியமானதாக இருப்பதால் 
'சிவ சம்போ' வரவேற்கத்தக்கதாக உள்ளது.

Ranking ⭐  3/ 5 

Pro
Venkat 

Comments

Popular posts from this blog