பூக்கி திரைவிமர்சனம்

பூக்கி திரைவிமர்சனம்

ஒளிப்​ப​தி​வாளர் கணேஷ் சந்​திரா இயக்​குந​ராக அறிமுகமாகியிருக்கும் படம், ‘பூக்கி’. இதில், அஜய் திஷன் ஹீரோ​வாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி​யாக R. K. தனுஷா நடித்திருக்​கிறார். இவர்களுடன் பாண்டிய​ராஜன், சுனில், இந்​து​மதி மணி​கண்​டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்​டி, ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்நிருக்க்​கின்​றனர். விஜய் ஆண்​டனி பிலிம் கார்ப்​பரேஷன் சார்​பில் ஃபாத்திமா விஜய் ஆண்​டனி தயாரித்​துள்​ளார்.
கதை
பட ஓப்பனிங்கில் கதாநாயகன் அஜய் திஷன் கதாநாயகி தனுஷாவுக்கும் காரில் வரும்போது  இவர்களுக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அவர்கள் போடும் சண்டையு வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு அது வைரலாக அவர்கள் அவர்களுக்குள் இருந்த ஆறு வருட காதலை பிரேக்கப்  செய்து கொள்கறார்கள். அதன் பிறகு திருமணம் செய்துகொள்ள அஜய் வேறு பெண்ணை தேட தனுஷா வேறு ஆணை தேட  அதன் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?  என்பதே படத்தின் கதை. 
கதாநாயகனாக அஜய் திஷன் வழக்கம்போல நடிப்பிலும் நடனத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார். கதாநாயகியாக தனுஷா புது வரவா என்று கேட்குமளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். அஜய் அப்பாவாக பாண்டியராஜன் சிறப்பாக நடித்துள்ளார். சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், லட்சுமி மஞ்சு, ராதா, அஸ்வின்ராம், பிக்பாஸ் சத்யா, பிரியங்கா, ஸ்ரேயா ஷர்மி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து  சிறப்பாக நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி  இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும்  இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.  விஜய் ஆண்டனியின் எடிட்டிங் அருமை. ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

அஜய் திஷன் இரண்டாம்பாதியில் கல்யாணத்தில் ஒரு நாயகியயை சந்திந்து காதல் செய்கிறார். அதுமுதல் கிளைமேக்ஸ் வரை படம் சுவாராஸ்யமாக பார்த்து ரசிக்கும்படி இருக்கிறது.
இயக்குநர் கணேஷ் சந்திரா 
புதிய பரிதி  பிரேக்கப்
காதல் கதையை . காதலர்கள் பார்க்கலாம். பாராட்டுக்கள்.
RANK 3.5/5 PRO AiMSatish Siva

Comments

Popular posts from this blog