‘ராட்ட’ - விமர்சனம்
‘ராட்ட’ - விமர்சனம்
குமாரபாளையம் பகுதியில் இருக்கும் நாயகன் சக்திவேல் நாகப்பன், அம்மாவுடன் வசித்து வருகிறார். சித்தா தர்ஷன் நடத்தும் விசைத்தறி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.சிறந்த உழைப்பாளியான நாயகன் அங்கு வேலை பார்ப்பவர்களை விட வாரம் அதிக சம்பளம் பெறக்கூடியவர் .
நாயகன் அம்மா மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டி கோவில் கோவிலாக வேண்டி வருகிறார். இந்நிலையில் நாயகி ஹெலன் நாயகன் வேலை பார்க்கும் விசைத்தறி பட்டறையில் வேலைக்கு சேர்கிறார். இதனையடுத்து நாயகன் வீட்டுக்கு அருகிலேயே குடும்பத்துடன் குடியேறுகிறார்.
இந்நிலையில் நாயகன் சக்திவேல் , நாயகி ஹெலன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் காதலை சொல்லிக் கொல்லாமல் இருக்கிறார்கள். ஒரு கட்டடத்தில் விசைத்தறி பட்டறை முதலாளி சித்தா தர்ஷன் நாயகியிடம் தாலியை கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்.
இறுதியில் நாயகி ஹெலன் விசைத்தறி பட்டறை முதலாளி சித்தா தர்ஷனை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? நாயகன் சக்திவேல் , நாயகி ஹெலன் இருவரின் காதல் கைகூடியதா ? இல்லையா? என்பதே ‘ராட்ட’ என்ற குடும்ப திரைப்படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சக்திவேல் நாகப்பன் துடிதுடிப்பான இளைஞராக ஆட்டம் , பாட்டம், கொண்டாட்டம் என்று கிராமத்து நாயகனாக வாழ்ந்திருக்கிறார். அம்மா மீது காட்டும் பாசம், மனைவி மீது காட்டும் அக்கறை, சிறந்த உழைப்பாளி என்று தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஹெலன் பக்கத்து வீட்டு பெண்ணை போல அழகு , நடிப்பு , காதல், நடனம்,ரொமான்ஸ் என அனைத்திலும் அசத்தலான நடிப்பபை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.
விசைத்தறி பட்டறை முதலாளியாக நடித்திருக்கும் சித்தா தர்ஷன் இதுவரை வில்லனாக பார்த்தவர்கள் இந்த படத்தின் மூலம் தன்னாலும் உணர்வுபூர்வமாக கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.
பட்டறை மேலாளராக வரும் சாப்ளின் பாலு, கல்பனா, வசந்தி, சுப்ரமணியம் , கிருஷ்ணன் ,சந்திரன், முத்துராஜா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் மணிகிருஷ்ணன் இசையில் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. வெற்றியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார்.
இன்றை தமிழ் சினிமாவில் போதை, வன்முறை, தெறிக்கும் இரத்தம் என்றுதான் படங்கள் வெளியாகி வருகிறது. இவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் குடும்ப கதையை மையமாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சக்திவேல் நாகப்பன் இத்திரைப்டத்தை அரசியல், ஆன்மீகம், ஜாதி மதம், வன்முறை, மது போதை, சண்டை, போலீஸ்,கைப்பேசி, இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லாமல் ரசிகர்களும் மக்களும் கொண்டாடும் வகையில் ஒரு திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : சக்திவேல் நாகப்பன், ஹெலன் ,சித்தா தர்ஷன், சாப்ளின் பாலு, கல்பனா, வசந்தி, சுப்ரமணியம்
இசை : மணிகிருஷ்ணன்
இயக்கம் : சக்திவேல் நாகப்பன்
நிருவாகத் தயாரிப்பு : டாக்டர் மூதுரை
மக்கள் தொடர்பு : விஜயமுரளி
Comments
Post a Comment