’சுப்பன்’ - விமர்சனம்
மதுரை ஏரியாவில் பெரிய தாதாவான பெரியவர் இவருக்கு வாரிசு இல்லை இவரிடம் விஸ்வாசமாக இருக்கும் ஆனந்த முருகன் மற்றும் சரவண சக்தி இருவருக்கும் சரிசமமாக தனது சொத்தை எழுதி வைக்கிறார்; ஆனால் அவரின் உயிருக்கு உயிரான புல்லட் ஒன்றை மட்டும் யாருக்கும் எழுதி வைக்காமல் தன்னுடனே சேர்த்து உதைக்க சொல்கிறார்
அந்த புல்லட்டு தான் மிகப்பெரிய கௌரவமாக என்னும் ஆனந்த முருகன், சரவண சக்தி இருவரும் மோதி கொள்கிறார்கள் இதில் இதில் சரவண சக்தியை கொன்று அந்த புல்லட்டை ஆனந்த் முருகன் அடைகிறார். மறுபக்கம் நாயகன் பாலஹாசன் மனைவி ஷார்மிஷா, தங்கை காயத்ரி மற்றும் அப்பா, அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.
காயத்ரிக்கு நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களில் வில்லன் ஆனந்த் முருகனின் தம்பி யாசர் தவறான வீடியோ ஒன்றை எடுத்து வைத்து கொண்டு பாலியில் ரீதியாக மிரட்டுகிறார். இதை காயத்ரி தனது குடும்பத்திடம் தெரிவிக்க போலீசில் புகார் கொடுக்க நினைக்க யாசருக்கு போலீஸ் துணையாக நிற்கிறது.
இதனையடுத்து நாயகன் பாலஹாசன் யாசரின் அண்ணன் ஆனந்த் முருகனிடம் கூறுகிறார். இறுதியில் ஆனந்த் முருகன் தம்பி யாசரை தட்டி வைத்தாரா? இல்லையா ? நாயகன் பாலஹாசன் தங்கை காயத்ரி திருமணத்தை நடத்தினாரா? இல்லையா? என்பதே ’சுப்பன்’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன் யதார்த்த நடிப்பால் கவர்கிறார். இவரது மனைவியாக நடித்திருக்கும் ஷார்மிஷா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
பாலஹாசன் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா இயல்பான நடிப்பால் அந்த9 கதாபத்திரத்திற்கு பலம் சேர்கிறார். நடிப்பு, நடனம், எமோஷனல் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஆனந்தமுருகன் அதிரடி வில்லனாக மிரட்டியிருக்கிறார். தம்பி மீது காட்டும் கண்டிப்பு ,மனைவி மீது காட்டும் அக்கறை என இவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை அஃதைக்கு துணை நிற்கிறது. குகநேசன் சோனைமுத்து ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மைய கருவாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் குகநேசன் சோனைமுத்து இத்திரைப்படத்தில் எந்தவிதத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் யாரையும் நம்ப வேண்டாம் என்றும் விழிப்புணர்வுடன் பெண்கள் இருக்க வேண்டும் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
நடிகர்கள் : ஆனந்தமுருகன், பாலஹாசன், யாசர், காயத்ரி ரேமா, ஷார்மிஷா, சுவாதி எஸ் பிள்ளை, டாக்டர் சரவணன்
இசை : ஜோஸ் பிராங்கிளின்
இயக்கம் : குகநேசன் சோனைமுத்த
நேர்மையான விமர்சனம் எழுதி இருக்கும் தங்கள் குழுவினருக்கு மிக்க நன்றி🙏
ReplyDeleteசுப்பனுக்கும் நன்றி 🙏