MiddleClassreview
#MiddleClass 3.5/5
#மிடில்கிளாஸ்
ஒரு
மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைத்தால், அது தொலைந்தால், என்ன நடக்கும். இதுதான் கரு. கதை நாயகனாக முனிஸ்காந்த் ஜெயித்து இருக்கிறார். விஜயலட்சுமி நடிப்பில் கலக்கி இருக்கிறார். படம் பார்த்துவிட்டு வரும் போது ஒருவித பாசிட்டிவ் பீல் கிடைக்கும். அதுதான் படத்தின் வெற்றி. இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் ஸ்கிரிப்ட், சொல்ல வரும் கருத்து பக்கா. கு பார்க்கலாம் விமர்சனம்
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் முனீஷ்காந்த் கிடைக்கும் வருமானத்தில் மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். முனீஷ்காந்துக்கு தனது கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, விவசாயம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரது மனைவி விஜயலட்சுமிக்கு சென்னையிலேயே சொந்த இடம் வாங்கி, வீடு கட்டி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் விஜயலட்சுமியின் தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. தனது மூத்த சகோதரியைத் தாண்டி சீர் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் .அதற்காக அளவுக்கு மீறி கடன் வாங்குகிறார்.
இந்நிலையில் முனீஷ்காந்த் ஒருநாள் வீட்டைச் சுத்தம் செய்யும் போது பழைய காலத்து ட்ரங்க் பெட்டியில் இருந்து ஒரு பத்திரம் கிடைக்கிறது .அதில் அவரது அப்பா வேல ராமமூர்த்தி 1970 இல் சென்னையில் இருக்கும் கடை ஒன்றை மாநில இளைஞருக்கு இலவசமாக கொடுக்கிறார்.
அந்த பத்திரத்தை கொண்டு போய் வடமாநில முதலாளியிடம் கொடுக்க ஒரு கோடி ரூபாய்க்கான செக் கொடுக்கிறார்.அந்த செக்கை கொண்டு செல்லும் வழியில் திடீர் என ஒரு கோடி ரூபாய்க்கான செக் காணாமல் போகிறது.
இறுதியில் காணாமல் போன செக் கிடைத்ததா? இல்லையா? கிராமத்தில் இடம் வாங்க வேண்டும் என்ற முனீஸ்காந்த் ஆசை நிறைவேறியதா ? இல்லையா? என்பதே ’மிடில் கிளாஸ்’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் முனீஷ்காந்த் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். பாசம் , காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தையும் சிறப்பான நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
முனீஷ்காந்தின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி அழுத்தமான கதாபாத்திரத்தில் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கணவர் மீது கோபப்படுவது, மீண்டும் சமாதானம் ஆவது என வேறுபட்ட நடிப்பை வெளிப்டுத்தியிருக்கிறார்.
காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மார்வாடி முதலாளி என படத்தில் மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பிரனவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை,. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உளள்து. சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலமாக இருக்கிறது.
நடுத்தரக் குடும்ப வாழ்க்கையில் நடக்கிற முக்கிய சம்பவங்களை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இத்திரைப்படத்தில் இருப்பதாய் வைத்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை மகிச்சியாக இருக்கும் என்றும் முடிந்தளவு பிறர்க்கு உதவவேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
நடிகர்கள் : முனீஷ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, குரேஷி, கோடங்கி வடிவேல், மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி
இசை : பிரனவ் முனிராஜ்
ஒளிப்பதிவு : சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்
இயக்கம் : கிஷோர் முத்துராமலிங்கம்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
Comments
Post a Comment