மாஸ்க்’  - விமர்சனம்
சென்னையில் நாயகன் கவின் துப்பறிவாளர் என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். கவினுக்கு  உதவியாக போலீஸ் கல்லூரி வினோத் மற்றும் வக்கீல் ரமேஷ் திலக் இருக்கிறார்கள்.
மறுபக்கம் ஆண்ட்ரியா பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர் என்ற பெயரில் பெண்களை வைத்து தவறான செயல்களை செய்து  அதன் மூலம் பணத்தை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக  440 கோடி ரூபாய் pணத்தை  ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார்.
அந்த பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார். அந்த பணத்தை எம்.ஆர்.ராதா மாஸ்க் அணிந்த சிலர் கொள்ளை அடித்து விடுகிறார்கள். அந்த பணத்தை தேடும் வேலையை    ஆண்ட்ரியா கவினிடம் கொடுக்கிறார்.

இறுதியில் கவின் காணாமல் போன பணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? பணத்தை கொள்ளை அடித்தவர்கள் யார்? எதற்க்காக ? என்பதே  ‘மாஸ்க்’  படத்தின் மீதிக்கதை.

துப்பறிவாளராக நடித்திருக்கும் கவின் தில்லு முள்ளு வேலை செய்யும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நட்பு, குழந்தை  மீது பாசம், பணத்தை ஆசை பிடித்தவர்  என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமூக ஆர்வலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ,ஆண்ட்ரியா ஜெரமையா கண்களாலே மிரட்டி இருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில்  அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பபை கொடுத்திருக்கிறார் . மற்றொரு நாயகியாக வரும் ருஹாணி ஷர்மா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

சார்லி, வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு துணை நிற்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

இன்றைய சமூகத்தில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விகர்ணன் அசோக் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கதையை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார்.
நடிகர்கள் :  கவின் ,ஆண்ட்ரியா ஜெரமையா, ருஹாணி ஷர்மா,  சார்லி,  ரமேஷ் திலக்,  கல்லூரி வினோத், அர்ச்சனா , ரெடின் கிங்ஸ்லீ
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
இயக்கம் : விகர்ணன் அசோக்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Comments

Popular posts from this blog