’யெல்லோ’ - விமர்சனம்’
நாயகி பூர்ணா மற்றும் அவரது காதலருக்கும் வெளிநாட்டில் வேலை கிடைக்க இருவரும் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட நினைக்கிறார்கள். இந்நிலையில் பூர்ணாவின் அப்பா டெல்லி கணேஷ் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பூர்ணாவிற்கு வருகிறது.
இதனால் வெளிநாடு செல்ல முடியாமல் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனையடுத்து வங்கி ஒன்றில் வேலைக்கு சேர அங்கு வேலை பளு மற்றும் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.
அப்பா டெல்லி கணேஷ் அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்டு, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கேரளாவிற்கு தனது சிறுவயதில் விடுதியில் தங்கிப் படித்த நண்பர்களை பார்ப்பதற்காக பூர்ணிமா செல்கிறார். அந்த பயணத்தில் அவருக்கு வைபவ் முருகேசனின் அறிமுகம் கிடைக்க இருவரும் இணைந்து பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
இறுதியில் நாயகி பூர்ணா தனது பள்ளி நண்பர்களை பார்த்தாரா? இல்லையா? மீண்டும் தனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா ? என்பதே ’யெல்லோ’ படத்தின் மீதிக்கதை.
ஆதிரை கதாபத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். காதல், நடனம், செண்டிமெண்ட் , எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த முழுப்படத்தையும் தன் தோல் மீது சுமந்து நிற்கிறார்.
கதைநாயகனாக நடித்திருக்கும் வைபவ் முருகேசன் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார். சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. அபி ஆத்விக் ஒளிப்பதிவு காடு , மலை, இரயில் பயணம் என அனைத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
பள்ளி தோழர்களை பார்க்க செல்லும் நாயகியை மைய கருவாக வைத்து ஒரு அழகிய பயணத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த இடத்திலும் சோர்வு ஏற்படாத வகையில் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
yellow #யெல்லோ 3.5/5
ஹீரோயினின் 8 நாள் வாழ்க்கை கலர்புல்லாக, உணர்வுபூர்வமாக விவரிக்கும் கதை. ஒவ்வொரு சீனும் அவ்வளவு அழகு. நாமும் இப்படி ஒரு பயணம் போகணும். வாழ்க்கையை ரசிக்கணும், நிறைய கற்றுக்கொள்ள வேண்டும
நடிகர்கள் : பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், விநோதினி வைத்யநாதன், பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி
இசை : கிளிஃபி கிறிஸ் மற்றும் ஆனந்த் காசிநாத்
இயக்கம் : ஹரி மகாதேவன்
மக்கள் தொடர்பு : பரணி
Comments
Post a Comment