’தடை அதை உடை’ - விமர்சனம்
செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் குணா பாபு, கணேஷ், மகாதீர் முகமது ஆகிய இளைஞர்கள் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்து தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து உண்மை சம்பவத்தை தழுவி தயாரான குறும்படத்தை காண்பிக்கிறார்.
அந்த குறும்படத்தை பார்த்த தயாரிப்பாளர் அதில் திருப்தி அடையவில்லை. இதனையடுத்து குணா பாபு அவனுடைய நண்பர்களும் மற்றொரு வாய்ப்பை கேட்கிறார்கள். இன்றைய கால கட்டத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு குறும்படத்தை உருவாக்கி அதையும் அதே தயாரிப்பாளரிடம் காண்பிக்கிறார்கள்
இதனையடுத்து இவர்கள் எதிர்பாராத ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இறுதியில் நண்பர்களுக்கு தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்தாரா? இல்லையா? நண்பர்கள் அந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதே
’தடை அதை உடை’ படத்தின்கதை.
கதைநாயகர்களாக நடித்திருக்கும் குணா பாபு, கணேஷ், மகாதீர் முகமது, ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். சண்டை,கோபம்,செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
தாசில்தாராக நடித்திருக்கும் மகேஷ் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு துணை நிற்கிறார். படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரம் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாய் சுந்தர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. - தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரின் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.
சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபால் குடும்ப பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பை மைய கருவாக வைத்து திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன் முருகேசன்
நடிகர்கள் : மகேஷ், குணா பாபு, கணேஷ், மகாதீர் முகமது, பாக்கியம் கௌதமி, வேல் முருகன்
இசை : சாய் சுந்தர்
இயக்கம் : அறிவழகன் முருகேசன்
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
Comments
Post a Comment