’கும்கி 2’- விமர்சனம்
மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் நாயகன் மதி சிறுவயதில் அம்மா இருந்தும் பாசம் கிடைக்காமல் இருக்கிறான்.  ஒரு நாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் யானை குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து இருப்பதை பார்த்து அந்த யானை குட்டியை காப்பாற்றுகிறான்.

அன்றுமுதல் அந்த குட்டி யானை மதியை சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார். யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை காணாமல் போய் விடுகிறது. யானையை தேடி அலையும் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்நிலை மறந்தவராக வலம் வருகிறார்

இதனையடுத்து ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் மதி, 5 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது காணாமல் யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கிறது.  

யானையை தேடி செல்லும் மதி வழியில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இறுதியில் நாயகன் மதி யானையை கண்டுபிடித்தாரா? இல்லையா?  யானை  காணாமல் போனதற்கு காரணம் என்ன? என்பதே  ’கும்கி 2’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மதி புதியவர் போல இல்லாமல் இயல்பான நடிப்பால் கவர்கிறார். யானை மீது காட்டும் பாசம், யானையை இழந்துவிட்டு தவிப்பது, யானையை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என அனைத்திலும் சிறப்பான நடிப்பால் அனைவரின் மனதிலும் தனி  இடம் பிடிக்கிறார்.
சத்தத்தை ஒலிப்பதிவு செய்பவராக நடித்திருக்கும் நாயகி  ஷ்ரிதா ராவ் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், யானையை கொண்டு செல்ல வரும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்  அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு காடு,  மலை, அருவி  ஆகியவற்றை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
யானை மற்றும் நாயகன் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்  இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : மதி, மதிம் ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி
இசை : நிவாஸ் கே.பிரசன்னா
ஒளிப்பதிவு : எம்.சுகுமார்
இயக்கம் : பிரபு சாலமன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog