’மதராஸி’ - விமர்சனம்
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் வித்யூத் மற்றும் ஷபீர் இருவரும் தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக நினைத்து அதற்காக ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு 6 கண்டெய்னர் லாரியில் துப்பாக்கிகளை கொண்டு வருகிறார்கள்.
இதே சமயம் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு துறையினர் இதனை தடுக்க நினைக்கையில் பிஜு மேனனுக்கு விபத்து ஏற்பட மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். மறுபக்கம் காதல் தோல்வியால் சிவகார்த்திகேயன் பாலத்தின் மீது இருந்து கீழே குதிக்க சிறு காயங்களுடன் இதே மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். சிவகார்த்திகேயன் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 16 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது.
ஒரு கட்டத்தில் பிஜு மேனனுக்கு அந்த கண்டெய்னர் லாரி அம்பத்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருப்பது தெரிய வர அந்த ஆயுதங்களை அழிப்பதற்காக சிவகார்த்திகேயனை அனுப்பி வைக்கிறார் பிஜு மேனன்
இதே வேளையில் சிவகார்த்திகேயனை தேடி நாயகி ருக்மணி வசந்த் தேசிய புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வருகிறார். இறுதியில் சிவகார்த்திகேயன் மூலம் பயங்கரவாத கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டதா ? இல்லையா? சிவகார்த்திகேயன் - ருக்மணி வசந்த் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’மதராஸி’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் மனநல பாதிக்கப்பட்ட இளைஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல்,நடனம், சண்டை, காமெடி என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் அழகாக வந்து அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் வில்லனாக மிரட்டியிருக்கிறார் வித்யூத் ஜமால்
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக நடித்திருக்கும் பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் உள்ளது. சுதீப் இளமோன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் துப்பாக்கி போன்ற பயங்கரமான ஆயுதங்கள் கிடைத்தால் அது பொதுமக்களுக்கு எத்தகைய பிரச்சனையை உருவாகும் என்பதை மைய கருவாக வைத்து முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
Madharaasi [4/5] :
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மேனன், விக்ராந்த், சபீர் கல்லரக்கல்
இசை : அனிருத் ரவிச்சந்திரன்
இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
Comments
Post a Comment