’காந்தி கண்ணாடி’  - விமர்சனம்
2016 ஆண்டு நடக்கும் கதை நாயகன் KPY பாலா - நாயகி நமிதா இருவரும் காதலித்து வருகிறார்கள்.  இவர்கள் இருவரும் சேர்ந்து திருமணம் , கோவில் திருவிழா, பிறந்தநாள் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.
மறுபக்கம் செக்யூரிட்டி வேலை பார்த்தது வரும் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி சக்தி வேல், தனது காதல் மனைவியான அர்ச்சனாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு  வாரிசு இல்லை என்றாலும், ஒருவர் மீது ஒருவர் அளவிற்கு அதிகமாக அன்பு செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பாலாஜி சக்தி வேல் மனைவி அர்ச்சனாவின் 60 வது கல்யாணம் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமண ஏற்பாடு செய்யும் பாலாவை சந்திக்கிறார்.  பாலா திருமணம் செய்து வைக்க 50 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று கூறுகிறார்.

இதனையடுத்து பாலாஜி கோவையில் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய அதன் மூலம் 90 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதே வேளையில் மத்திய அரசு அறிவிப்பின் மூலம் அவரிடம் இருக்கும் 500, 1000 ரூபாய்  பணம் செல்லாமல் போகிறது. இதனால் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இறுதியில் பாலாஜி - அர்ச்சனா 60 வது திருமணத்தை பாலா நடத்தி வைத்தாரா ? இல்லையா?  KPY பாலா - நமிதா  இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’காந்தி கண்ணாடி’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும்  KPY பாலா சின்ன திரையின் மூலம் பிரபலமானவர் கதாநாயகனாக இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். காதல்,ஆக்ஷன்,சென்டிமென்ட ,காமெடி என  அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மனைவி மீது காட்டும் அன்பு,அக்கறை, பாசம் என அனைத்தையும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நமிதா கிருஷ்ணமூர்த்தி, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.பாலாஜி சக்திவேலின் மனைவியாக நடித்திருக்கும் அர்ச்சனா தனது அனுபவமான நடிப்பு மூலம்  அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது .   பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.

60 வயதை கடந்த பிறகும் காதல் திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மையக்கருவாக வைத்து ஒரு முழுநீள குடும்ப திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷெரிப் இத்திரைப்படத்தில் பணத்தை விட பாசம் ஒன்றே சிறந்தது என்று சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் :   KPY பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன்,
இசை : விவேக் - மெர்வின்
இயக்கம் : ஷெரிப்
மக்கள் தொடர்பு : ரேகா

Comments

Popular posts from this blog