‘வீரவணக்கம்’  - விமர்சனம்
கம்யூனிஸ்ட் வாதியாக இருக்கும் பரத் அந்த ஊரில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அனைத்து மக்களையும் சாதி பாகுபாடு இன்றி சரி சமமாக பார்த்து அவர்களது குறைகளை தீர்த்து வைக்கிறார். இவருக்கு கல்லூரி செல்லும் மகள் ஒருவர் இருக்கிறார்.

 பக்கத்து ஊரில் கீழ் சாதி பிரிவை சேர்ந்த இளைஞரை பரத் மகள் காதலிக்கிறார்.  பரத் மக்களை அழைத்து கொண்டு  96 வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினியை சந்திக்கிறார்., புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவில் கம்யூனிய புரட்சி உருவாகி கதையை கூறுகிறார்.
1940 கால கட்டத்தில் ஜமீன்தார் சித்திக் ஊர் மக்களை அடிமைகளாக நடத்தி வருகிறார். திருமணம் ஆகும் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்.  இதே ஊரில் வசிக்கும் பரணி ஒரு பெண்ணை காதலிக்க அந்த பெண்ணை ஜமீன்தார் கற்பழித்து விட நியாயம் கேட்டு செல்லும் பரணியை கொலை செய்து விடுகிறார்.
இதனையடுத்து  அந்த ஊருக்கு வரும் கம்யூனிஸ்ட் வாதியான் சமுத்திரக்கனி மக்களை சந்திக்கிறார். இந்த தகவல் ஜமீன்தாருக்கு தெரிய வர போலீஸ் மூலம் சமுத்திரக்கனி கொலை செய்ய திட்டம் போடுகிறார் ஜமீன்தார்.
இறுதியில் சமுத்திரக்கனி போலீசிடம் இருந்து தப்பித்தாரா? இல்லையா? ஜமீன்தார் பிடியில் இருந்து மக்கள் மீண்டார்களா ? இல்லையா?  பரத் மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே  ‘வீரவணக்கம்’ படத்தின் கதை.

பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி அந்த கதாபத்திரமாகவே மாறி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.  நடை, உடை , வசன உச்சரிப்பு , சண்டை என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

கம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். மக்கள் குறைகளை தீர்ப்பவராகவும் மகளின் காதலை புரிந்து கொண்ட அப்பாவாக கண் முன் நிற்கிறார்.

கம்யூனிச போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் பிரேம் குமார், ரமேஷ்  பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, அதர்ஷ், ஆய்ஷ்விகா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பலம்  கவியரசுவின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அனில் வி. நாகேந்திரன்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி
இசை : எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார்
இயக்கம் : அனில் வி. நாகேந்திரன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)

Comments

Popular posts from this blog