’இந்திரா’ - விமர்சனம்
போலீஸ் இன்ஸ்பெக்ட்ரான வசந்த் ரவி - மெஹ்ரின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் வசந்த் ரவி மது அருந்திவிட்டு போலீஸ் வாகனத்தை இயக்க விபத்து ஏற்படுகிறது, இதற்காக சஸ்பென்ஸ் செய்யப்படுகிறார்.
வசந்த் ரவிக்கு வேலை இல்லாததால் குடிப்பழக்கம் அதிகமாகிறது ஒரு கட்டத்தில், குடியால் தனது பார்வையை இழந்து விடுகிறார். கண் பார்வை இழந்ததால் கணவனை கண்ணுக்கு கண்ணாக பார்த்து வருகிறார் நாயகி மெஹ்ரின்.
இதேசமயம் தன்னை சீண்டியவர்களை கொடூரமாக கொலை செய்து வரும் சுனில் மணிக்கட்டு பகுதி வரை கையினை துண்டாக வெட்டி வீசி எறிந்து வருகிறார். இதே போல அடுத்தடுத்து சில கொலைகளை செய்து வருகிறார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்ட்ரான கல்யாண்
இதே வேளையில் மெஹ்ரின் கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து கொலை செய்த கொலைகாரனை தேடி செல்லும் வசந்த் ரவியிடம் சுனில் மாட்டிக் கொள்கிறார். சுனிலிடம் வசந்த்ரவி கேட்ட மெஹ்ரினை தான் கொலை செய்யவில்லை என்று கூறுகிறார் சுனில்
இறுதியில் மெஹ்ரினை கொலை செய்தது யார்? கொலைகாரனை வசந்த்ரவி கண்டுபிடித்தாரா? இல்லையா? பறிபோன பார்வை மீண்டும் கிடைத்ததா ? இல்லையா? என்பதே ’இந்திரா’ படத்தின் மீதிக்கதை.
இந்திரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் ரவி பார்வையற்றவராக எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், ஆக்ஷன், எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வசந்த்ரவி மனைவியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பிர்சாடா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். வில்லனான நடித்திருக்கும் சுனில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அனிகா பாவாடை தாவணியில் அழகு தேவதையாக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அஜ்மல் தாஹ்சீன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. பிரபு ராகவ் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
தொடர் கொலை மையமாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சபரீஷ் நந்தா யாரும் யூகிக்க முடியாத விதத்தில் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சாடா, அனிகா
இசை : அஜ்மல் தாஹ்சீன்
இயக்கம் : சபரீஷ் நந்தா
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S 2 Media )
Comments
Post a Comment