‘நாளை நமதே’ - விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  சிவதானுபுரம் என்கிற கிராமத்தில்  மேல் சாதியினர், ஒடுக்கபப்ட்ட  சமூகத்தினர்  என இரண்டு பிரிவினர் வாழ்ந்து வருகிறார்கள். இதே கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த  நாயகி மதுமிதா படித்து விட்டு நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மாமன் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் சிவதானுபுரம்  கிராமத்தைத் தனித்தொகுதியாக அரசு அறிவிக்கிறது, இதனால், கோபமடையும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ராஜலிங்கம், எப்படியாவது இந்த தேர்தலில் தான் ஜெயிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.அதற்காக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனது வீட்டு வேலைக்காரனான பரோட்டா முருகேசனை தனது சார்பில் வேட்பாளராக நிறுத்துகிறார் 

அப்போது அக்கிராம முழுவதுமே ராஜலிங்கத்திற்கு ஆதரவு தருவதென ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்கிறார்கள். பஞ்சாயத்து எதிர்ப்பை மீறி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நாயகி மதுமிதா, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட  வேட்புமனு மனுதாக்கல் செய்கிறார்.

எதிரிகளால் மதுமிதாவிற்கு  பலவிதமான கொலை மிரட்டல்கள் வர, அனைத்தையும் கடந்து, தேர்தலில் நிச்சயம் போட்டியிட்டே தீருவேன், என்பதில் உறுதியாக இருக்கிறார் மதுமிதா, 

இறுதியில் நாயகி மதுமிதா தேர்தலில் வெற்றி பெற்றாரா? இல்லையா?  மதுமிதாவிற்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே  ‘நாளை நமதே’ படத்தின் கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா அமைதியான முகத்தில் அழுத்தமான கதாபத்திரத்தை அழகாக கையாண்டுகிறார். தன்னை கொலை செய்ய வரும் எதிரிக்கும் உயிர் பிச்சை கொடுக்கிறார். முழுப்படத்தையும்  தன் தோளில் சுமந்து நிற்கிறார்.

வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்றவாறு உள்ளனர்.

இசையமைப்பாளர் வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. பிரவீன் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பதவிக்கு வர வேண்டும் என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வெண்பா கதிரேசன்  இத்திரைப்படத்தை  நாளிதழ்களில் வெளிவரும் செய்தியை அடிப்படையாக கொண்டு கிராமத்து மக்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் 

நடிகர்கள் : மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன்
இசை : வி.ஜி.ஹரிகிருஷ்ணன்
இயக்கம் : வெண்பா கதிரேசன்
மக்கள் தொடர்பு : குணா

Comments

Popular posts from this blog