’பரமசிவன் பாத்திமா’ - விமர்சனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணிபுரம் என்ற கிராமத்தில் இந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள். யோகோபுரத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இரண்டு ஊர் மக்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில் யோகோபுரத்தில் திருமணம் வரவேற்பு நடக்க அந்த மாப்பிளை திடீர் என மர்மனான முறையில் மரணமடைகிறார். இதேபோல சுப்ரமணிபுரத்தில் திருமண மாப்பிளை மர்மமான முறையில் மரணமடைகிறார்.
இதனையடுத்து இந்த தொடர் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது. இறுதியில் இந்த தொடர் கொலைக்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? சுப்ரமணிபுரம் - யோகோபுரம் இருவேறு மதத்தை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’பரமசிவன் பாத்திமா’ படத்தின் மீதிக்கதை.
ஆசிரியராக நடித்திருக்கும் விமல் எதார்த்தமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன்,கதாநாயகி அண்ணாக வரும் எம்.சுகுமார் மதவெறி பிடித்தவராக வருகிறார். கூல் சுரேஷ், மகேந்திரன், ஆதிரா, ஸ்ரீரஞ்சனி, மஜோஜ்குமார் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. எம்.சுகுமார் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
மதமாற்றம், காதல், பழிவாங்குதல் ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எசக்கி கார்வண்ணன் இத்திரைப்படத்தை காதல், ஆக்ஷன்,செண்டிமெண்ட் , ஹாரர் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார்.
நடிகர்கள் : விமல், சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், எசக்கி கார்வண்ணன், எம்.சுகுமார், கூல் சுரேஷ்,
இசை : தீபன் சக்கரவர்த்தி
இயக்கம் : எசக்கி கார்வண்ணன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Comments
Post a Comment