தக் லைஃப்’ - விமர்சனம்
1994 ஆம் காலகட்டத்தில் பழைய டெல்லியில் தாதாவாக இருக்கிறார் கமல் இவருக்கு துணையாக இவருடைய அண்ணன் நாசர்,ஜோஜூ ஜார்ஜ்,பகவதி பெருமாள் ஆகியோர் இருக்கிறார்கள். அதே ஊரில் மற்றொரு தாதாவாக இருக்கும் மகேஷ் மஞ்சரேக்கருக்கும் கமலுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
கமலை கொலை செய்ய மகேஷ் போலீசுடன் சேர்ந்து சதி திட்டம் போடுகிறார். அப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பேப்பர் போட வரும் குமரவேலை கமல் தரப்பினர் சுட்டுவிடுகிறார்கள். அப்போது அனாதையாக இருக்கும் சிம்புவை தன்னுடன் அழைத்து செல்கிறார்.கமல்
இந்த சம்பவத்தின் போது தொலைந்த சிம்புவின் தங்கையை கண்டுபிடித்து தருவதாக கமல் வாக்கு கொடுக்கிறார். இந்நிலையில் நாசர் மகள் சாவிற்கு காரணமாவனை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லும் கமல் அனைத்து பொறுப்பவையும் சிம்புவிடம் ஒப்படைக்கிறார்.
சில நாட்களுக்கு பிறகு வெளியே வரும் கமலை கொலை செய்ய சிம்பு,நாசர்,பகவதி பெருமாள் திட்டம் போடுகிறார்கள். இறுதியில் எதிரிகள் சதி திட்டத்தில் இருந்து கமல் உயிர் பிழைத்தாரா? இல்லையா? காணாமல் போன சிம்புவின் தங்கை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’தக் லைஃப்’ படத்தின் கதை.
ராயர் சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கமல் கம்பீரமான தாதாவாக மிரட்டியிருக்கிறார் உடல் மொழியிலும், உரையாடலிலும் தன் தனித்துவத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார். அபிராமி மற்றும் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் சண்டை காட்சிகளில் தனி கவனம் பெறுகிறார்.
கமலின் வளர்ப்பு மகனாக நடித்திருக்கும் சிலம்பரசன் துடிப்புமிக்க இளைஞராக நடித்திருக்கிறார்.கமலின் இடத்தை பிடிக்க எந்த எல்லைக்கும் செல்வது காணாமல் போன தங்கைக்காக வருந்துவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கமல்ஹாசனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, திரிஷா,நாசர், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஜிங்குஜா ஜிங்குஜா...” பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது.
தாதா இடத்தை பிடிக்க உறவுகளுக்குள்ளே நடக்கும் போட்டி, பொறாமை, மோதல் ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாகியியிருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம் இத்திரைப்படத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என யூகிக்கும் அளவிற்கான கதையாகத்தான் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது.
நடிகர்கள்: கமல்ஹாசன், சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன்
இசை: ஏ ஆர் ரகுமான்
இயக்கம்: மணி ரத்னம்
மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு & சதீஷ்குமார்
Comments
Post a Comment