’குலசாமி’ - விமர்சனம்
எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் குட்டிப்புலி’ ஷரவண ஷக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப், கீர்த்தனா, ஜனனி பாலு, வினோதினி, போஸ் வெங்கட், முத்துப்பாண்டி, லாவண்யா, ஜாங்கிட் (சிறப்பு தோற்றம்) ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’குலசாமி’
கிராமத்தில் வசித்து வரும் நாயகன் விமல் தனது தங்கை மருத்துவராக வேண்டும் என்பது இவருடைய ஆசை அதற்காக சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் தன் தங்கையை சேர்க்கிறார். எதிர்பாராத விதமாக அவருடைய தங்கை மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.. தங்கை உடலை மருத்துவ கல்லூரிக்கே தானமாக வழங்குவதுடன் தினமும் தன் தங்கை உடலை வந்து பார்த்து விட்டு செல்கிறார்
தங்கை படித்த கல்லூரியின் அருகில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். விமல் இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகளை கல்லூரி பேராசிரியை ஒருவர் பண ஆசை காட்டி பெரும்புள்ளிகளுக்கு விருந்தாக்குகிறார் இதனை ஆதாரங்கள் மூலம் அறிந்துகொள்ளும் நாயகி தான்யா விமலிடம் கூறுகிறார்.. இறுதியில் நாயகன் விமல் குற்றவாளிகளுக்கு அளிக்கும் கொடூரமான தண்டனை என்ன ? என்பதே ’குலசாமி’ படத்தின் கதை.
நாயகன் விமலை அமைதியான கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம் இந்த படத்தில். எதிரிகளை துவம்சம் செய்யும்போதும் சரி, தங்கையை நினைத்து கதறி அழும்போதும் சரி.. தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப், வெறும் பாடலுக்கு என்று மட்டும் இல்லாமல், கதையின் முக்கிய பாத்திரமாக வருகிறார். விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனா, கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் வினோதினி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், சரவண சக்தியின் மகன் சூர்யா உள்ளிட்ட வில்லன்கள், உண்மையிலேயே அதிர வைக்கிறார்கள். நகைச்சுவைக்கு குட்டிப்புலி ஷரவண ஷக்தி
வி.எம். மகாலிங்கம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னை இசை கதையோடு பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் சேதுபதி வசனம்
கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மிக தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்குவதை விட, கொடூரமான மரண தண்டனை தான் சரியானது, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ’குட்டி புலி’ சரவணசக்தி அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் " என்ற ... பாரதியின் ரௌத்திரத்திற்கு உயிர் கொடுத்து ... பாரதியின் மீசையை இன்னும் கொஞ்சம் முறுக்கி விட்ட ... மங்கையரை காக்க வந்த எங்க "குலசாமியே " ... இதற்கு மேல் வார்த்தைகள் வரவிடாமல் ... உணர்ச்சி பெருக்கால் அடைக்கிறது என் மனம் ... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள் .. தாய்மார்களின் சார்பில் நன்றிகள் பல கோடி ..உயர்திரு இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி அண்ணா! 👍👍👍👌👌👌💐💐💐💐💐
ReplyDelete