Posts

Showing posts from December, 2021
Image
வலிமை'க்கு பிறகு வருகிறது "அயர்ன் மாஸ்க்" ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த "அயன் மாஸ்க்" படம் வெளியீடு வலிமை'க்கு பிறகு வருகிறது! சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த "அயர்ன் மாஸ்க்" ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க தமிழில் வருகிறது! வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.! டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை! இரண்டு மணி நேர படமாக, இருவரும் ரசிகர்களை மகிழ்விக்க தமிழ் பேசி வருகிறார்கள்! ஜூராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் "அயர்ன் மாஸ்க்" படத
Image
*ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் ஆர்யா* *ஜன-3ல் வெளியாகும் ‘தி பெட்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்* *’தி பெட்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ; ஜன-3ல் வெளியிடும் ஆர்யா* *படுக்கை சொல்லும் கதை ; வித்தியாசக் கோணத்தில் உருவாகியுள்ள ‘தி பெட்’* ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.  ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.  மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை.  ஸ்ரீகா
Image
டி.ஆர்.விஜயன் இயக்கத்தில் உருவாகும் நகைச்சுவை கலந்த காதல் படம் "பிரம்ம முகூர்த்தம்" " மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6.மணிவரை நடைபெறும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறேன். பிரபல முன்னணி க தாநாயகி இதில் நாயகியாக நடிப்பதற்கும், முன்னனியில் பிரபல நான்கெழுத்து நகைச்சுவை நடிகர் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  தேனி,கம்பம், போடி, ஏற்காடு மற்றும் சென்னையிலும் இதன் படப்பிடிப்பை நடத்தி மார்ச் மாதம் திரைக்கு வருவதற்கு உருவாகும் இதற்கு  " பிரம்ம முகூர்த்தம்" என்று பெயர் வைத்துள்ளோம். தொழில் அதிபர் பி.செந்தில்நாதன் கே.வி.மீடியா நிறுவனம் சார்பில் இதை தயாரிக்கிறார்" என்று இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் புதியவரான டி.ஆர். விஜயன் கூறினார். விஜய் விஷ்வா, மனோஜ்குமார், இருவருடன் முல்லை கோதண்டம், விஜய் டி.வி.பாலா, உட்பட மேலும் பல நகைச்சுவை நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். பி. முகமது ஜாபர் வசனம் தீட்ட, சினேகன், சி.பாலமுருகன், ராஜா
Image
குறுக்கு வழி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !  புதுமையான ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் தான் “குறுக்கு வழி”. இப்படத்தை N.T. நந்தா எழுதி, இயக்கியுள்ளார்.  K சிங் மற்றும் A .ஷர்மா  இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்‌ஷி அகர்வால், ஷிரா கார்க் மற்றும் மிப்பு ஆகியோர் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, N.T.நந்தா ஒளிப்பதிவு செய்து இசையமைத்துள்ளார்.  இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர்-இயக்குனர்-ஒளிப்பதிவாளர்-இசையமைப்பாளர் N.T.நந்தா கூறுகையில்,  “நான் இதற்கு முன்பு 2017ல் வெளியான வல்ல தேசம் என்ற தமிழ்ப் படத்தைத் இயக்கினேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நான் 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறேன், அதற்கு நான் ஒளிப்பதிவும், செய்துள்ளேன். நாங்கள் இப்படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்,  2022ல் இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதற்கிடையேயான தருணத்தில் தான் , ‘குறுக்கு வழி’ என்ற தமிழ்த் திரைப்படத்தை  உரு
Image
இளைஞர்களின் சாகசங்களும், பேய்களின் அட்டகாசமும் நிறைந்த ‘கஜானா’! திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா’ பேரரசர் புதைத்த ’கஜானா’-வை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்கள்! சினிமா என்பது மிகப்பெரிய காட்சி ஊடகம் என்றாலும், அதனுடைய முதல் நோக்கம் மக்களை மகிழ்விப்பது தான். அதனை சரியாக புரிந்துக்கொண்ட  படைப்பாளிகள், மக்களை மகிழ்விக்க என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்குமான கலகலப்பான காமெடி, திகில் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது ‘கஜானா’. போர் ஸ்கொயர்  ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிப்பதோடு ,படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார். ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார். இயக்குநர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிற
Image
கின்னஸ் சாதனை நோக்கி,  மீண்டும் உயிர்த்தெழும் நாயகன் திலீபன் புகழேந்தி ! தமிழ் சினிமாவில் “பள்ளிக்குடம் போகமாலே, எவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன்  திலீபன் புகழேந்தி, தான் முதலில் முயற்சித்த கின்னஸ் பைக் ரேஸிங் ரெக்கார்டை, 10 வருட போராட்டத்திற்கு பிறகு,  மீண்டும் சாதிக்கவுள்ளார்.    தமிழ் சினிமாவில் வளரும் இளம் நாயகனாக கவனம் குவித்து வருபவர் நாயகன் திலீபன் புகழேந்தி, இலக்க்கிய நாயகன் கவிஞர் புலமைபித்தனின் பேரனும் பிரபல தயாரிப்பாளர் புகழேந்தி அவர்களின் மகனுமாகிய இவர் தற்போது, சாகவரம் எனும் சைக்கோ திரில்லர் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். சிறு வயதிலேயே பைக் மீது மிகுந்த ஆர்வமும் காதலும் கொண்டிருந்த இவர் வருங்காலத்தில் பைக் ரேஸராக வர வேண்டும் என்ற கனவில் இருந்தார்.  சிறு வயது முதல் தொடர்ந்து பைக் ரேஸ் பயிற்சிகளை செய்து, ஸ்கீம் பைக் ரேஸிங்கில்   தமிழ்நாடு பைக் ரேஸிங் சாம்பியனாக ஜெயித்தார். உலகளாவிய கின்னஸ் சாதனைக்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன் முன்னெடுத்தார். அப்போது நடந்த எதிர்ப
Image
ஜீ5 ஒரிஜினல் படம் - 'பிளட் மணி' (Blood Money)  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும், ஜீ5 தமிழில் தொடர்ந்து தரமான வெற்றிப்படங்களை தந்து வருகிறது. தற்போது இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிக்கும் ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படத்தை வழங்குகிறது. இப்படம் டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது. இதனையொட்டி, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்களுக்கு இப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.  இந்நிகழ்வில்  திரைக்கதை ஆசிரியர் சங்கர் தாஸ் பேசியதாவது… “ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களுக்கு பிறகு இந்த மேடையில் உங்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் நெல்சனுடன் இணைந்து வேகவேகமாக ஒரு திரைக்கதை எழுதினேன். அப்படி 28 நாட்களில் இந்த திரைக்கதையை எழுதினோம். மிகக் குறைந்த காலத்தில் ஒரு திரைக்கதை எழுத முடியும் என நம்பிக்கை கொடுத்த நெல்சனுக்கு நன்றி. அவரும் நானும் இணைந்து இந்த திரைக்கதையை எழுதினோம். அவர் பெயரை கூட வேண்டாம் என்று எனக்காக விட்டுக் கொ
Image
நடிகர்/ இயக்குனர் பகவதி பாலா 5 படங்கள் இந்த வருடம் 1.1. 2021 ஆம் தேதி  " ஆதிக்க வர்க்கம்" திரைப்படமும், 29.10.2021 அன்று " சின்னப் பண்ண பெரிய பண்ண" திரைப்படமும், 3-12.2021 அன்று " ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ." ஆகிய மூன்று படங்களும் பகவதி பாலா இயக்கி வெளிவந்துள்ளன. இவர் கதாநாயகனாக நடித்த " சினிமா கனவுகள்" திரைப்படம் 18 - 11.2021 ஆம் தேதி வெளிவந்துள்ளது. அடுத்து இவர் ஒளிப்பதிவு செய்ய  " சில்லாட்ட" திரைப்படம் 31-12-2021 அன்று வெளிவருகிறது. கொரோனா காலத்திலும் தனது பங்களிப்பை ஐந்து திரைப்படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்த ஆண்டு  துவக்க நாளிலும் (1.1.2021) ஆண்டு  (31.12.2021) கடைசி நாளிலும் , இவர் பணிபுரிந்த படங்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. விஜயமுரளி PRO
Image
நடிகனாக ஜெயிப்பதே லட்சியம்! - ’ஓங்காரம்’ பட நாயகன் ஸ்ரீதர் பேட்டி நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் கோடம்பாக்கத்திற்குள் பலர் நுழைவதுண்டு. ஆனால், அவர்களில் ஜெயித்து மக்கள் மனதில் நுழைவது என்னவோ ஒரு சிலர்  மட்டுமே. கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் மட்டும் போதாது, சினிமாவை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும், என்று கூறுவதுண்டு.  அப்படி ஒருவராக தமிழ் சினிமாவில் நடிகராக வளர்ந்து வருகிறார் ஸ்ரீதர். ஸ்ரீதருக்கு பள்ளி காலத்திலேயே நடிப்பு மீது ஆர்வம் வர, அன்று முதல் ஒரு நடிகனாக தன்னை தயார்ப்படுத்தி வந்தவர், கூத்துபட்டறையில்  சேர்ந்து நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். கூத்துப்பட்டறை பயிற்சி முடிந்தவுட6 ன் ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக  அறிமுகமான ஸ்ரீதர், தனது நடிப்பு மூலம் பாராட்டு பெற்றதோடு, மலேசியாவில் தயாரான ‘குறி தி டிராப்’ (Kuri The Drop) என்ற படத்தில் நாயகனாக  நடிக்கும் வாய்ப்பும் பெற்றார். அப்படத்தை முடித்தவர் தமிழில் ‘ஷாட் கட்’ என்ற படத்தில் ந டித்தார். பல சர்வதேசா திரைப்பட விழா
Image
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தயாரான ”ரைட்டர்”! பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.  தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.  சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி.   காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.  ‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’... ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால

மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

Image
மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி. கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம் - பா.இரஞ்சித். ‘மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ”மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இன்று மதுரையிலும், நாளை கோவையில் நடத்துகிறோம், மேலும் வரும் 24 முதல் 31 ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் சென்னையில் நடைபெறுகிறது. நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்ற

முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது Directors Club !

Image
முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது Directors Club ! Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம், SS ராஜமௌலி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், கதாநாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் என சினிமாவின் அனைத்து துறையினரும் இக்குழுவில் வந்து உதவி இயக்குநர்களோடு கலந்துரையாடி வருகின்றனர்,   உதவி இயக்குனர்களுக்கு ஒரு அரிய களமாகவும், அவர்களுக்கு இலவச பயிற்சி பட்டறையாகவும் விளங்கும் Directors Club குழுமம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. Directors Club நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை ராண

40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒட்டியம்பாக்கம் அரசன் காலனி சுற்றியுள்ள ஒரு லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் ஏரியை புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன் முன்னெடுப்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

Image
40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒட்டியம்பாக்கம் அரசன் காலனி சுற்றியுள்ள ஒரு லட்சம் மக்கள் பயன் பெறும்  வகையில் ஏரியை  புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன்  முன்னெடுப்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஸ்பாட் லைட்  மற்றும் ரோட்டரி ஸ்பாட்லைட் இன்டர்நேஷனல் பால் இணைந்து டாக்டர் சூசன் மார்த்தாண்டன் முன்னெடுப்பில் 40 ஏக்கர்  நிலப்பரப்பு கொண்ட ஒட்டியம்பாக்கத்திலுள்ள அரசன்காலனி ஏரியை புனரமைக்கும் பணி மற்றும் சர்வதேச திட்டங்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி  கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது . அரசன்காலனி ஏரியை புனரமைப்பு செய்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அப்பகுதியை சுற்றியுள்ள ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது  மேலும்திரட்டப்படும் வருமானம், சென்னையில் உள்ள ஏரியை மறுசீரமைப்பதற்கும், கொலொன்னோவ  ரோட்டரி கிளப் கொலம்மபோ சுகாதாரப் பாது காப்புத் திட்டத்திற்கும் நேரடியாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ரோட்டரி சங்கம் தொடர்ந்து ஏழாம் ஆண்டில் இது போன்ற பொதுநல திட்டத்தில் தங்களை ஈடுபடுத்த