காயம் - திரைப்படம் AUDIO LAUNCH
"காயம்"
.................
மருத்துவம் வியாபாரமாக மாற்றப்படும்பொழுது ஏழை எளிய மக்கள் உயிர்வாழ்வது கேள்விக்குறியாகிறது. மருத்துவம் ஏழ்மையின் விளிம்புநிலை மக்களுக்கு போய் சேராமல் அவர்களின் அவல நிலை என்ன என்பதையும் மருத்துவர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் உயிரை காப்பாற்றுகின்றனர் என்ற மேன்மையான செயல்பாடுகள் பற்றி வெளிபடுத்தும் படம் காயம்.
மாறா மூவீஸ் சார்பில் மாறா N.ராஜேந்திரன் தயாரிக்க கிடா விருந்து, உதய் ஆகிய படங்களை இயக்கிய A. தமிழ்செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ரிஷ்வான் கதாநாயகனாகவும், ஜோதா, அனீஷா இருவரும் கதாநாயகிகளாகவும் அறிமுகமாகியுள்ளனர். வில்லனாக பருத்திவீரன் சரவணனும், குணச்சித்திரமாக மருத்துவர் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் N.ராஜேந்திரனும் அமர்க்களபடுத்தியுள்ளனர்.
சேலம் தமிழ்,சேரன்ராஜ், ஆகியோருடன் தீபக், காஞ்சனா, ஆர். எம்., காஞ்சனா, அம்மு, அச்சு,ஈஸ்வரன், சேகர், செந்தில், ஆரியன் போன்ற வளரும் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - A.சம்பத்குமார், இசை-நல்ல தம்பி,
பாடல்கள் - செல்வராஜா, தங்கதுரை
சண்டை பயிற்சி - ஹரி முருகன்,
நடனம் - ஸ்டைல் பாலா
தயாரிப்பு - மாறா .N.ராஜேந்திரன்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்- A. தமிழ் செல்வன்
கருணையின் வடிவங்களே
கடவுளின் உருவங்களே
தாயெனவே உயிர்களை
காத்திடும் மருத்துவ தெய்வமே.....என்று மருத்துவர்களின் சேவையை பாராட்டும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.
சேலம், ஏற்காடு போன்ற இடங்களில் 30 நாட்களில் ஒரேக் கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
படத்தின் நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்து பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பேரரசு, கலைப்புலி ஜி.சேகரன், ஜாக்குவார் தங்கம், N.விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
.............
வெங்கட் பி. ஆர்.ஓ

Angelina Johnny JoDha is first lead
ReplyDelete